--> Skip to main content

பொது அறிவு - இந்திய புவியியல் மாதிரித் தேர்வு - 1

பாடப்பகுதி : புவியியல் : 10 ஆம் வகுப்பு புவியியல் 1. இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் 2.இந்தியா -காலநிலை 3. இந்தியா - இயற்கை வளம் 4. இந்தியா - வேளாண் தொழில்

  1. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்.
    1. ஐக்கிய அமெரிக்க நாட்டை விட 3 மடங்கு பெரியது - இந்தியா
    2. ஜப்பனை விட 8 மடங்கு பெரியது - இந்தியா
    3. பாகிஸ்தானை விட 4 மடங்கு பெரியது - இந்தியா
    4. ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய நாடு - இந்தியா

  2. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
    1. தீர்க்க கோடுகள் ஓர் இடத்தின் நேரத்தை கணக்கிட பயன்படுகிறது.
    2. இந்தியாவின் அலகாபாத் வழியாக செல்லும் 82º 30’ கிழக்கு தீர்க்கம் இந்திய திட்ட நேரத்தை கணக்கிட உதவும் தீர்க்கமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
    3. இந்திய திட்ட நேரம் கிரின்விச் 0’ தீர்க்க நேரத்தை விட 5 மணி 30’ நிமிடம் முன்னதாக அமைந்துள்ளது.
    4. 1947 ஆம் ஆண்டு இந்திய அரசு, நாடு முழுமைக்குமான அலுவலக நேரமாக இந்திய திட்ட நேரத்தை பயன்படுத்துகிறது.
    1. 1,2 சரி 3,4 தவறு
    2. 1,2,3 சரி 4 தவறு
    3. a,b,d சரி d தவறு
    4. அனைத்தும் சரி

  3. உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்
    1. 8846
    2. 8848
    3. 8844
    4. 8842

  4. கிழக்கு தொடர்ச்சி மலைகளும், மேற்குத் தொடர்ச்சி மலைகளும் இணையும் இடம்
    1. கொடைக்கானல்
    2. பழனிமலை
    3. நீலகிரி
    4. அகத்தியர் மலை

  5. தென்னிந்தியாவின் உயரமான சிகரம்
    1. ஆனைமுடி
    2. பழனிமலை
    3. கொடைக்கானல் மலை
    4. தொட்டபெட்டா

  6. பொருத்துக
    (1) சிலிகா ஏரி (a) ஜம்மு காஷ்மீர்
    (2) கொல்லேறு (b) ஆந்திரா
    (3) பழவேற்காடு (c) தமிழ்நாடு
    (4) தால் ஏரி (d) ஒடிசா
    1. a b c d
    2. d b c a
    3. a b d c
    4. b a c d

  7. அந்தமான் நிகோபாரின் தென்கோடி முனையை எவ்வாறு அழைக்கின்றனர்.
    1. பாக் நீர் சந்தி
    2. விராவதி முனை
    3. பூர் வாஞ்சல் முனை
    4. இந்திரா முனை

  8. இந்தியாவின் நடுவே செல்லும் மிக முக்கிய தீர்க்க கோடு.
    1. அகமதாபாத்
    2. அலகாபாத்
    3. ஹதராபாத்
    4. ஔரங்காபாத்

  9. கிழக்கிலிருந்து மேற்காக பாயும் ஆறுகள்
    1. நர்மதை, தபதி
    2. மகாநதி, தபதி
    3. யமுனை, தபதி
    4. நர்மதை, கோதாவரி

  10. மேகாலயா தலைநகர்
    1. அகர்தலா
    2. காங்டாக்
    3. ஷில்லாங்
    4. இம்பால்



Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar