--> Skip to main content

TNPSC Current Affairs 22 February 2019

நடப்பு நிகழ்வுகள் 22 பிப்ரவரி 2019

தமிழ்நாடு 

  • தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள் 2018 :  2018 ஆம் ஆண்டிற்கான தமிழ்ப்புத்தாண்டு விருதுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அவற்றின் விவரம் வருமாறு,
    • தமிழ்த்தாய் விருது - புவனேசுவர் தமிழ்ச் சங்கம்
    • கபிலர் விருது - புலவர் மி. காசுமான்
    • உ.வே.சா. விருது - நடன. காசிநாதன்
    • கம்பர் விருது - முனைவர் க. முருகேசன்
    • சொல்லின் செல்வர் விருது - ஆவடிக்குமார்
    • ஜி.யு.போப் விருது- கு.கோ. சந்திரசேகரன் நாயர்
    • உமறுப்புலவர் விருது - பேராசிரியர் சா.நசீமாபானு
    • இளங்கோவடிகள் விருது - சிலம்பொலி சு.செல்லப்பன்
    • அம்மா இலக்கிய விருது - முனைவர் உலகநாயகி பழனி
    • சிங்காரவேலர் விருது - பா. வீரமணி
    • 2017ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது - வை.மதன்கார்க்கி (கார்க்கி ஆராய்ச்சி அறக்கட்டளை)
    • 2018ம் ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள் - யூமா வாசுகி, லட்சுமண ராமசாமி, அரிமா மு. சீனிவாசன் ஜி. குப்புசாமி, மருத்துவர் சே. அக்பர்கவுசர், முனைவர் ராஜலட்சுமி சீனிவாசன், செ.செந்தில் குமார் (எ) ஸ்ரீ கிரிதாரிதாஸ், முனைவர் பழனி. அரங்கசாமி, எஸ். சங்கரநாராயணன், ச. நிலா ஆகியோருக்கு
    • 2018ம் ஆண்டிற்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகளான, இலக்கிய விருது டென்மார்க் நாட்டைச் சேர்ந்த வி. ஜீவகுமாரனுக்கும், இலக்கண விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த கி.பாரதிதாசனுக்கும், மொழியியல் விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த முனைவர் ச. சச்சிதானந்தத்துக்கும் வழங்கப்படவுள்ளன.
கூ,தக. : இவற்றில்,  சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பெயரில் 2017–2018ம் ஆண்டிலும், தனித்தமிழ் தந்தை மறைமலையடிகளார் மற்றும் தமிழ்த்திரு அயோத்திதாசப்பண்டிதர்  பெயர்களிலும் 2018–19 விருதுகள் புதிதாக அறிவிக்கப்படவையாகும்.
  • சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் ரூ.2.30 கோடியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நூலகக்கட்டிடத்தை 21-2-2019 அன்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
    • மேலும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கை தொடங்குவதற்கு ரூ.1 கோடிக்கான காசோலையை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ. விசயராகவனிடம் முதல்வர் பழனிசாமி வழங்கினார். அதேபோன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடுகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு வசதியாக ரூ.9 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்த்தாய் நூல் விற்பனை ஊர்தி யின் சேவையைத் தொடங்கி வைத்து  அந்த வாகனத்தின் சாவியை ஓட்டுநருக்கு வழங்கினார்.

இந்தியா

  • உலகின் சிறந்த பணிவழங்கும் நிறுவனங்களின் (Top Employer) பட்டியலில் இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்ட  டி.சி.எஸ் (TCS) நிறுவனம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 21-2-2019 அன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
  • ’கழிவிலிருந்து ஆச்சரியம்’ ( “Waste to Wonder” ) என்ற பெயரில் கழிவு மேலாண்மைக்கான முன்மாதிரி பூங்காவை தெற்கு தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் 21-2-2019 அன்று திறந்து வைத்தார்.
  • NARI - National Aids Research Institute (தேசிய எயிட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம்) | தலைமையிடம் மஹாராஷ்டிரா மாநிலம் பூனே நகரில் உள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • பாகிஸ்தானுக்கான உபரி நதிநீர் நிறுத்துவதென முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  இதன்படி,  கிழக்கிலிருந்து பாயும் நதிகளில் இருந்து இந்தியாவுக்கான பங்கில் எஞ்சியிருக்கும் உபரிநீர், இனி ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு மடைமாற்றப்படும்.
    • ராவி நதியில் ஷாபூர்கண்டி அணை கட்டும் பணிகள் தொடங்கி விட்டன. நமக்கான நதிநீர் பங்கானது, உஜ் நதியில் கட்டப்படும் அணையில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து ஜம்மு காஷ்மீருக்கு பயன்படுத்தப்படும். எஞ்சிய நதிநீரானது, 2-ஆவது ராவி-பியாஸ் இணைப்பின் மூலமாக இதர மாநிலங்களுக்கு பாயுமாறு செய்யப்படும்.
    • பஞ்சாப் மாநிலத்தில், ராவி நதி பாயும் வழித்தடத்தில் ஷாபூர்கண்டி அணையை கட்டும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியிருந்தது. தற்போது அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டன. அந்த அணையின் உயரம் 100 மீட்டரை எட்டும்போதுதான் பாகிஸ்தானுக்கான உபரிநீர் பாய்வதை தடுக்க இயலும்.
    • இந்தியாவின் இந்த நடவடிக்கையானது எந்த வகையிலும் சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை மீறிய வகையில் இருக்காது. ஏனெனில், இந்தியா தனக்கு உரித்தான நீரை பயன்படுத்திக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சியாகவே இந்த நடவடிக்கைகள் பார்க்கப்படும்.
பின்னணி :
  • 1960-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தின்படி, கிழக்கிலிருந்து பாயும் ராவி, பியாஸ், சட்லஜ் நதிகளின் நீரை இந்தியா பிரதானமாக பயன்படுத்துவது எனவும், மேற்கிலிருந்து பாயும் சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் நீரை பாகிஸ்தான் பிரதானமாக பயன்படுத்திக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
  • இதில், ராவி, பியாஸ், சட்லஜ் நதிகளின் நீரில் இந்தியாவின் பங்கு என்பது, 14.37 லட்சம் கன அடியாகும். இதில் அந்த நதிகளின் குறுக்காக 3 பிரதான அணைகளை கட்டியதன் மூலமாக இந்தியா தனக்கான பங்கில் 95 சதவீத நீரை பயன்படுத்தி வருகிறது. எஞ்சிய 5 சதவீத அளவு நீர் (அதாவது 65,340 கன அடி) பாகிஸ்தானுக்கான உபரி நீராகச் செல்கிறது. அந்நாட்டுக்கு அவ்வாறு உபரியாகப் பாயும் தனது பங்கு நீரையும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தியா கூடுதலான அணைகளை கட்டி வருகிறது. கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவின் பங்கிலிருந்து உபரிநீரை பாகிஸ்தான் பெற்று வந்துள்ளது. எனவே, தற்போது இந்தியா தனது பங்கு நீரை நிறுத்தி வைப்பது என்பது, ஒப்பந்தத்தை மீறிய செயலாகாது.
  • தென்கொரியா நாட்டின் சியோல் நகரிலுள்ள யோன்சே பல்கலைக்கழக (Yonsei University) வளாகத்தில் மகாத்மா காந்தியடிகளின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி அவர்கள் 21-2-2019 அன்று திறந்து வைத்தார்கள்.
  • 'காடு அறிவியல்’ (Forestry Science) தொடர்பான ஆராய்ச்சிகளில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இந்திய சுற்றுலா அமைச்சகம் மற்றும் கனடாவின்  ‘பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் (University of British Columbia (UBC)) இடையே  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

முக்கிய தினங்கள்

  • உலகத் தாய்மொழி தினம் - பிப்ரவரி 21 | மையக்கருத்து (2019) - வளர்ச்சி, அமைதி மற்றும் ஒப்புரவிற்காக  உள்நாட்டு  மொழிகள்  (Indigenous languages matter for development, peace building and reconciliation)
  • மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினம் - பிப்ரவரி 24

விருதுகள்

  • பிரதமர் மோடிக்கு 'சியோல் அமைதிப் பரிசு' 2018  : 'ஏழை- பணக்காரர் இடையிலான சமூக மற்றும் பொருளாதார வித்தியாசத்தைக் குறைத்ததற்காகவும் உலக அமைதிக்காகப் பங்காற்றியதற்காகவும் இந்தியப் பிரதமர் மோடிக்கு 2018-ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருது 22-2-2019 அன்று வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் 14-வது நபராக மோடி திகழ்கிறார்.
    • 1990-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் சியோல் அமைதி விருது, அதே ஆண்டு சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நினைவாகத் தொடங்கப்பட்டது. முந்தைய ஆண்டுகளில் ஐ.நா. முன்னாள் செயலர் கோபி அன்னன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • சர்வதேச நல்லாசிரியர் விருதுக்கான போட்டியில் இறுதிச் சுற்றில் இந்தியாவின் ஸ்வரூப் ராவல் :   பிரிட்டனின் வர்க்கீ அறக்கட்டளை ஆண்டுதோறும் வழங்கி வரும் சர்வதேச நல்லாசிரியர் விருதுக்கான இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலில் முன்னாள் இந்திய அழகியும் நடிகையுமான  ஸ்வரூப் ராவலின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு வாழ்க்கைத் திறன் மேம்பாடு குறித்து சிறப்பான பயிற்சிகள் அளித்தமைக்காக அவர் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் 179 நாடுகளில் இருந்து பெறப்பட்டுள்ள சுமார் 10,000 விண்ணப்பங்களிலிருந்து இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 பேரில் ஒருவராக ஸ்வரூப் ராவல் இடம் பெற்றுள்ளார்.

விளையாட்டுக்கள்

  • பிசிசிஐ அமைப்புக்கு முதல் குறை தீர் நடுவராக ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே. ஜெயினை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.      

அறிவியல் & தொழில்நுட்பம்

  • மனிதனால் உருவாக்கப்பட்ட பருவநிலை மாற்றக் (human-induced climate change) காரணங்களினால்  முற்றிலும் அழிக்கப்பட்டுள்ள உலகின் முதல் உயிரினமாக ஆஸ்திரேலிய சிறு பிரவுண் எலி (Australian small brown rat) அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ’ஜின் ஜியோமெங்’ (Xin Xiaomeng) என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் முதல் பெண் செய்தி வாசிக்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோவை  சீனாவைச் சேர்ந்த ’ஜிங்குவா’ (Xinhua) செய்தி நிறுவனம் பணியமர்த்தியுள்ளது.
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar