--> Skip to main content

பொது அறிவு - இந்திய புவியியல் மாதிரித் தேர்வு - 2

பாடப்பகுதி : புவியியல் : 10 ஆம் வகுப்பு :   1. இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் 2.இந்தியா -காலநிலை 3. இந்தியா - இயற்கை வளம் 4. இந்தியா - வேளாண் தொழில்

  1. தவறான பொருத்தத்தை தேர்ந்தெடு.
    1. பாந்தலாசா - நீர்பகுதி
    2. இந்தியாவின் உயர்ந்த பீடபூமி - ஜாஸ்கர்
    3. பாஞ்சியா - நிலப்பகுதி
    4. பனி உறைவிடம் - இமயமலை

  2. இந்தியாவின் உயர்ந்த சிகரம்
    1. காட்வின் ஆஸ்டின்
    2. கஞ்சன் ஐங்கா
    3. நங்கபர்வத்
    4. தவனகிரி

  3. பொருத்துக
    (1) கஞ்சன் ஐங்கா (a) 8598 Km
    (2) நங்கபர்வத் (b) 8126 Km
    (3) தவளகிரி (c) 8167 Km
    (4) நந்ததேவி (d) 7817 Km
    1. a b d c
    2. b a d c
    3. a b c d
    4. d c b a

  4. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
    1. இமயமலையின் வடக்கு மலைத்தொடரான ஹிமாத்ரி இதன் உயரம் 6000M ஆகும்.
    2. உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் மலைசிகரம் இந்த மலை தொடரில் தான் அமைந்துள்ளது
    1. 2 சரி 1 தவறு
    2. 1,2 தவறு
    3. 1 சரி 2 தவறு
    4. 1,2 சரி

  5. இந்தியாவிலேயே மிகப்பழமையான மடிப்பு மலை
    1. ஆரவல்லிமலை
    2. இமய மலைத்தொடர்
    3. சாத்பூரா மலைத்தொடர்
    4. விந்திய மலைத்தொடர்

  6. கீழ்கண்டவற்றில் கவறான பொருத்தம் தேர்ந்தெடு.
    1. கொங்கண சமவெளி - குஜராத் தெற்கிலிருந்து கோவா வரை சுமார் 500 கி.மீ வரை பரவியுள்ளது
    2. கர்நாடகா சமவெளி - கோவாவிலிருந்து மங்களுர் வரை சமார் 500 கி.மீ பரவியுள்ளது.
    3. மலபார் சமவெளி - மங்களுருக்கும் கன்னியாகுமரிக்கும் நடுவே அமைந்துள்ளது
    4. உத்கல் சமவெளி - பீகார் கடற்கரையிலிருந்து 400 கி.மீ வரை நீண்டுள்ளது.

  7. கண்ட காலநிலை
    1. கோடைகாலத்தில் மிதமான வெப்பமாகவும், குளிர்காலத்தில் மிதமான குளிராகவும் உள்ள காலநிலை
    2. கோடை காலத்தில் அதிக வெப்பமாகவும், குளிர் காலத்தில் அதிக குளிராகவும் உள்ள காலநிலை
    3. கோடைகாலத்தில் அதிக குளிராகவும், குளிர் காலத்தில் அதிக வெப்பமாகவும் உள்ள காலநிலை
    4. கோடை மற்றும் குளிர் காலங்களில் அதிக வெப்பமாக உள்ள காலநிலை

  8. எல்-நினோ என்பதைப் பற்றிய தவறானகூற்று.
    1. இது உலகின் பல்வேறு பகுதிகளைல் வறட்சியையும் வெள்ளத்தையும் கடும் வானிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
    2. இந்தியாவின் தென் மேற்கு பருவகாற்று வீச ஆரம்பிப்பதில் கால தாமத்த்தை ஏற்படுத்துகிறது
    3. இது தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
    4. எல்-நினோ என்பது 5 முதல் 10 வருடங்க்ளுக்கு ஒருமுறை காணப்படும் ஓர் வானிலை நிகழ்வு

  9. இந்தியாவின் வடக்கு மற்றும் வட மேற்கு பகுதிகளில் கோடை காலத்தில் பகல் நேரத்தில் வீசும் வலிமையான வெப்பக் காற்று
    1. லூ காற்று
    2. நார்வெஸ்டர்
    3. மாஞ்சாரல்
    4. மான் சூன்

  10. பொருத்துக
    (1) கோடைக்காலம் (a) அக்டோபர் முதல் நவம்பர் வரை
    (2) தென்மேற்கு பருவ காற்று காலம் (b) டிசம்பர் முதல் பிப்ரவரி வரை
    (3) வடகிழக்கு பருவக்காற்றுக் காலம் (c) மார்ச் முதல் மே வரை
    (4) குளிர்காலம் (d) ஜீன் முதல் செப்டம்பர் வரை
    1. c d b a
    2. c d a b
    3. d c b a
    4. a b c d



Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar