தமிழ்நாடு
- அகில இந்திய ‘எண்டாஸ்கோப்பி’ மாநாடு, ‘ஈவி எண்டாஸ்கோப்பி 2019’ என்ற தலைப்பில் , சென்னையில் 16-2-2019 அன்று நடைபெற்றது. நாடெங்கிலுமிருந்து 300-க்கும் மேற்பட்ட பெண் டாக்டர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்கள்.
இந்தியா
- இந்தியாவின் முதல் மாவட்ட குளிர்விப்பு முறைமை (district cooling system) ஆந்திரப்பிரதேச மாநிலத் தலைநகர் அமராவதியில் அமைக்கப்படவுள்ளது. 20000 டன் திறன் கொண்ட குளிர்விப்பு முறையின் மூலம் அமராவதி மாவட்டத்திலுள்ள மாநில சட்டமன்ற, உயர்நீதிமன்ற, தலைமைச்செயலக மற்றும் பிற அரசு கட்டிடங்களில் ஒருங்கிணைந்த முறையில் குளிர்விப்பு முறை அமல்படுத்தப்படவுள்ளது. இதற்காக ஐக்கிய அரபு எமிரேட்டின் National Central Cooling Company PJSC (Tabreed) எனும் நிறுவனத்துடன் ஆந்திர அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. வரும் 2021 முதல் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் இந்த திட்டத்தின் மூலம் 40% மின்சாரம் சேமிக்கப்படுவதுடன் பெருமளவு கார்பண்டை ஆக்சைடு வெளியீட்டையும் தடுக்க இயலும்.
- ’தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை’ தற்போதிருக்கும் ரூ.4576 லிருந்து ரூ.9750 ஆக உயர்த்துவதற்கு (நாளொன்றிற்கு ரூ.375), மத்திய அரசினால் ‘அனூப் சாத்பாத்’ (Anoop Satpath) தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
- பிரதான் மந்திரி ஷரம் யோகி மந்தான் யோஜனா ( ‘Pradhan Mantri Shram Yogi Mandhan’ Scheme) எனப்படும் ரூ.15000 க்கு கீழ் ஊதியம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 60 வயதிற்கு மேல் மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம்15 பிப்ரவரி 2019 முதல் அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 10 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்கள் பயன்பெறுவர். இத்திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் மாதம் அவர்களின் வயதிற்கேற்ப ரூ. 55 முதல் ரூ.100 வரையில் மாதம் செலுத்த வேண்டியிருக்கும். உதாரணமாக 18 வயதுள்ள ஒரு தொழிலாளர் ரூ.55 ஐ மாதம் செலுத்த வேண்டியிருக்கும்.
- ’உலக நீடித்த வளர்ச்சி கூடுகை 2019’ (World Sustainable Development Summit 2019) 15 பிப்ரவரி 2019 அன்று புது தில்லியில் நடைபெற்றது. ’டெரி’ (The Energy and Resources Institute’ (TERI)) அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட இந்த கூடுகை, ‘2030 ஆண்டிற்கான இலக்குகளை அடைவது’ (‘Attaining the 2030 Agenda: delivering on our promise’) எனும் தலைப்பில் நடைபெற்றது.
கூ.தக. : புது தில்லியில் தலைமையிடத்தைக் கொண்டுள்ள ‘டெரி’ (TERI) அமைப்பின் தற்போதைய தலைவராக அஜய் மாத்தூர் உள்ளார்.
- சர்வதேச அணை பாதுகாப்பு மாநாடு 2019 (International Dam Safety Conference 2019) 13-14 பிப்ரவரி 2019 தினங்களில் ஒடிஷா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்றது.
- “Early Ed Asia 2019” என்ற பெயரில் ஆசியாவின் மிகப்பெரிய குழந்தைகள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 12-13 பிப்ரவரி 2019 தினங்களில் ’நமது குழந்தைகள், நமது எதிர்காலம்’ (‘Our Children. Our Future’) எனும் தலைப்பில் நடைபெற்றது.
- வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி அவர்கள் 15-2-2019 அன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய வந்தே பாரத் என்ற ரயிலை சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில்பெட்டித் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரித்த்துள்ளது.
- தலைநகர் தில்லியிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் வாராணசி வரையில் இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயிலில் 1,128 பயணிகள் பயணிக்கலாம்.
- முழுவதும் குளிரூட்டப்பட்ட 16 பெட்டிகளைக் கொண்டுள்ள இந்த ரயிலின் பெட்டிகள் அனைத்திலும் தானியங்கிக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களின் வருகை குறித்து தகவல் தெரிவிக்கும் வசதியும், வை-ஃபை வசதியும் இந்த ரயிலில் உள்ளன.
- இந்தியாவின் முதலாவது பெண் விமானப் பொறியாளராக பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண் ”ஹினா ஜெய்ஸ்வால்” நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் செயல்பாட்டு பிரிவுகளில் பணியாற்ற ஹினா ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- சம்ஸ்கிருத மொழியை, 2-ஆவது அரசு மொழியாக அங்கீகரிக்கும் "ஹிமாசல பிரதேச அரசு மொழி சட்டத் திருத்த மசோதா 2019' ஹிமாசல பிரதேச மாநில சட்டப்பேரவையில் 17-2-2019 அன்று நிறைவேறியது.
உலகம்
- ”மறைகுறியாக்கப்பட்ட நாணயம்” (கிரிப்டோ கரன்சி, cryptocurrency) முறையை அமலாக்கம் செய்துள்ள முதல் அமெரிக்க வங்கி எனும் பெயரை J P மார்கன் (J P Morgan) வங்கி பெற்றுள்ளது.
நியமனங்கள்
- ஐக்கிய நாடுகளவையின் திட்டமிடுதல், நிதி மற்றும் பட்ஜெட் அமைப்பின் உதவி பொது செயலர் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி (Controller, Assistant Secretary-General for Programme Planning, Finance and Budget) பதவியில் இந்தியாவைச் சேர்ந்த சந்திரமெளலி ராமநாதன் (Chandramouli Ramanathan) நியமிக்கப்பட்டுள்ளார்.
- மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக பிரமோத் சந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யின் 9-ஆவது துணைவேந்தராக கே. பிச்சுமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுகள்
- “ஸ்வச்சாதா எக்ஸலன்ஸ் விருது 2019” (Swachhata Excellence Awards 2019) -ல் முதல் மூன்று இடங்களை முறையே ராய்கார், அம்பிகாபூர் மற்றும் கும்பகோணம் ஆகிய நகராட்சிகள் பெற்றுள்ளன.
- “மார்டின் எண்ணால்ஸ் விருது 2019” (Martin Ennals Award 2019) எனப்படும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களுக்கான விருது இவ்வாண்டு, சூடான் நாட்டைச் சேர்ந்தவரும், ஆஸ்திரேலியாவினால் பப்புவா நியூ கினியா தீவில் சிறைப்படுத்தப்பட்டுள்ளவருமான மனித உரிமைகள் ஆர்வலர் அப்துல் ஆசிஃப் முஹாமத் (Abdul Aziz Muhamat) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டுக்கள்
- 83-ஆவது தேசிய சீனியர் பாட்மிண்டன் 2019 - வெற்றி பெற்றோர் விவரம்:
- மகளிர் பிரிவில் பி.வி.சிந்துவை வீழ்த்தி சாய்னா நெவால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் லக்ஷயா சென்னை வீழ்த்தி செளரவ் வர்மா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி-சிராக் ஷெட்டி இணை அர்ஜுன் எம்.ஆர்-ஷிலோக் ராமச்சந்திரன் இணையை வென்று பட்டம் வென்றது.
- சென்னையில் நடைபெற்ற தேசிய நடைஓட்ட சாம்பியன் போட்டியில் ஆடவர் பிரிவில் கே.டி.இர்ஃபானும், மகளிர் பிரிவில் செளமியாவும் பட்டம் வென்றனர்.
அறிவியல் & தொழில்நுட்பம்
- ”SPHEREx” (Spectro-Photometer for the History of the Universe, Epoch of Reionization and Ices Explorer) என்ற பெயரில் உலக தோற்றம் பற்றிய விண்வெளி தொலை நோக்கி ஆய்வு திட்டத்தை அமெரிக்காவின் நாசா தொடங்கியுள்ளது.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
- ‘Simplicity & Wisdom’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - தினேஸ் சஹாரா