நடப்பு நிகழ்வுகள் 6 செப்டம்பர் 2019
- சர்வதேச அளவில் அதிக தங்கம் கையிருப்பு வைத்துள்ள நாடுகளின் பட்டியல் 2019ல் இந்தியா (சர்வதேச நாணய நிதிய கணக்குடன் சேர்த்து) 9 வது இடத்தையும், இந்தியா தனி நாடாக (சர்வதேச நாணய நிதிய கணக்கு தவிர்த்து) 10 வது இடத்தையும் பெற்றுள்ளது. உலக தங்க கவுண்சில் ( World Gold Council (WGC)) வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களை முறையே அமெரிக்கா, ஜெர்மனி, சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund(IMF)), இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகள் பெற்றுள்ளன.
- கூ.தக. :1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலக தங்க கவுண்சிலின் தலைமையிடம் லண்டனில் அமைந்துள்ளது.
- தேசிய ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5 (இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் (5 - 9- 1888) நினைவாக)
- சர்வதேச தொண்டு தினம் (International Day of Charity) - செப்டம்பர் 5 (அன்னை தெரசா அவர்களின் நினைவு தினம்)
- கூ.தக. : அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆண்டு - 1979
- ’போக்குவரத்து மற்றும் சுற்றுலா போட்டி நாடுகளின் பட்டியல் 2019’ (Travel & Tourism Competitiveness Index (TTCI) ) ல் இந்தியா 34 வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் பெற்றுள்ளன.
- மூன்றாவது இந்தியா - ஆஸ்திரேலியா இணைய கொள்கை பேச்சுவார்த்தை (India-Australia Cyber Policy Dialogue) புது தில்லியில் 4 செப்டம்பர் 2019 அன்று நடைபெற்றது.
- முதலாவது தேசிய இணைய குற்றங்கள் புலனாய்வு மாநாடு (National Conference on Cyber Crime Investigation and Cyber Forensics) 4-5 செப்டம்பர் 2019 தினங்களில் புது தில்லியில் நடைபெற்றது.
- துப்பாக்கி சுடுதலில் ஒரே ஆண்டில் 4 உலகக் கோப்பை தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் இளம் நட்த்திரங்களாக மானு பாக்கர்-செளரவ் செளதரி இணை விளங்குகின்றனர்.மானு பாக்கர்: ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். செளரவ் செளதரி: உத்தரபிரதேசம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவராவர்.
- மலேசிய பிரதமர் மகாதீர் முகமது - இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: கிழக்கு பிராந்திய பொருளாதாரக் கூட்டமைப்பின் மாநாடு ரஷியாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதமர் மோடி, மலேசியப் பிரதமர் மகாதீர் முகமதுவை 5-9-2019 அன்று சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
- மத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவனத் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக சென்னை ஐஐடி, வாராணசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், காரக்பூர் ஐஐடி, தில்லி பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகிய 5 அரசு பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், தனியார் கல்விநிறுவனங்கள் வரிசையில், தமிழகத்தில் உள்ள வேலூர் விஐடி, அமிர்தா விஷ்வ வித்ய பீடம், புதுதில்லி ஜாமியா ஹதார்த் கல்வி நிறுவனம், ஒடிஸாவில் உள்ள கலிங்கா தொழில்நுட்ப கல்வி நிறுவனம், மொஹாலியில் உள்ள சத்திய பாரதி அறக்கட்டளையின் பாரதி கல்வி நிறுவனம் ஆகியவற்றுக்கு மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்துக்கான உத்தேச ஒப்புதல் கடிதம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
- கூ.தக. : மத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவனத் திட்டத்தின் கீழ் 10 அரசு உயர்கல்வி நிறுவனங்கள், 10 தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் என நாடு முழுவதிலுமிருந்து 20 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ. 1,000 கோடி நிதியுதவி அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நிதியதவி அளிக்கப்படாது என்ற போதும், பிற சுதந்திரங்கள் அனைத்தும் வழங்கப்படும். அதாவது, கல்வி மற்றும் நிர்வாகத்தில் முழு தன்னாட்சி அதிகாரம், நிதி பயன்பாடு சுதந்திரம் அதாவது, கல்வி நிறுவன வளர்ச்சிக்காக நிதி பெறுதல், செலவழித்தலில் முழு தன்னாட்சி அதிகாரம், மத்திய அரசின் அனுமதி பெறாமலே தலைசிறந்த வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுடன் கூட்டுறவு வைத்துக்கொள்ளும் அனுமதி, தொழில் நிறுவனத்தில் பணிபுரிபவர்களை கௌரவ விரிவுரையாளர்களாக நியமித்துக்கொள்ளும் அதிகாரம், 25 சதவீத இடங்களில் வெளிநாட்டு பேராசிரியர்களை பணியமர்த்திக் கொள்ளும் அதிகாரம், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் மாணவர், ஆசிரியர் பரிமாற்றம் செய்யும் அதிகாரம் என பல்வேறு சுதந்திரங்கள் வழங்கப்படும்.
- தமிழக அரசின் அரசு வழக்குரைஞராக வி.ஜெயபிரகாஷ் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- "நீரும் ஊரும்' திட்டம் : நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாக்கும் விதமாக புதுச்சேரி அரசு "நீரும் ஊரும்' என்ற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.