--> Skip to main content

TNPSC Current Affairs 5 September 2019

நடப்பு நிகழ்வுகள் 5 செப்டம்பர் 2019
  • சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த நீதிபதி ஏ.கே.மிட்டலை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்துள்ளது. 
  • இந்திய விமானப்படைக்கு ரூ. 5 ஆயிரம் கோடி செலவில் ஆகாஷ் ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • உலகில் சுற்றுலா செல்ல தகுந்த நாடுகள் வரிசைபட்டியலில் இந்தியா 34-வது இடத்தில் உள்ளது என உலக பொருளாதார மன்றத்தின் சமீபத்திய பயண மற்றும் சுற்றுலா  போட்டித்திறன் அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • ஐ.ஆர்.சி.டி.சி இயக்கும் இந்தியாவின் முதல் ‘தனியார்’ ரெயில் சேவை  அக்டோபர் 4 முதல் தொடங்குகிறது.  ஐ.ஆர்.சி.டி.சி எனப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன்  டெல்லி-லக்னோ தேஜாஸ் எக்ஸ்பிரஸ்  இடையே ரெயில் ஓட்டுநர், காவலர், ஆர்.பி.எஃப் ஆகியோரை இந்திய ரெயில்வே வழங்கும், டிக்கெட், ஊழியர்கள், பணியாளர்கள், கேட்டரிங் ஆகியவவையனைத்தும்  ஐ.ஆர்.சி.டி.சியால் நிர்வகிக்கப்படும்.
  • ரஷ்யாவில் தூர கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக   இந்தியா  ரஷ்யாவுக்கு 1 பில்லியன் டாலர் கடன் வழங்குகிறது. 
  • தமிழகத்தில் ரூ.2,780 கோடி முதலீடு செய்ய நியூயார்க்கில் நடந்த தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.
  • சென்னை-ரஷியா இடையே நேரடி கப்பல் போக்குவரத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை மாஸ்கோவில் பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் கூட்டாக அறிவித்தனர்.
  • சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம் ஆகிய 5 ரயில் நிலையங்கள் ISO:14001:2015  (சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம்) தரச்சான்றிதழ் பெற்றுள்ளன.
  • இந்தியா, ரஷியா இடையே வர்த்தகம், பாதுகாப்பு, முதலீடு, விண்வெளி, எண்ணெய்-எரிவாயு, அணுசக்தி, கல்வி, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.  
  • பாகிஸ்தானிலுள்ள கர்தார்பூர் குருத்வாராவுக்கு இந்திய யாத்ரீகர்கள் நுழைவுஇசைவு (விசா) இல்லாமல் பயணிப்பதற்கு இருநாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.
    • சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ் நினைவாக பாகிஸ்தானின் கர்தார்பூரில் எழுப்பப்பட்ட தர்பார் சாஹிப் குருத்வாரா, சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ளது. அந்த குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் புனிதப்பயணம் மேற்கொள்ள வசதியாக, இந்தியாவின் குருதாஸ்பூரையும், கர்தார்பூரையும் இணைக்கும் வகையிலான வழித்தடத்துக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியப் பகுதியிலும், பாகிஸ்தான் பகுதியிலும் தனித்தனியே அடிக்கல் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
  • The Republican Ethic (Volume 2)’ என்ற பெயரில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த வர்களின் உரைகளின் தொகுப்பு  வெளியிடப்பட்டுள்ளது. 
  • ’லஸோத்தா’ (Kingdom of Lesotho) நாட்டிற்கான இந்தியாவின் ஹை கமிஷனராக ஜெய்தீப் சர்கார் நியமிக்கப்பட்டுள்ளார். 
  • ”பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வங்கிக்கடன்களுக்கான”   இரண்டாம் கட்ட சந்தை பற்றி ஆராய  டி.என்.மனோகரன் தலைமையில் அமைக்கப்பட்ட  குழு  ( taskforce on secondary market for corporate loans)  தனது அறிக்கையை ரிசர்வ் வங்கியிடம் 3-9-2019 அன்று சமர்ப்பித்துள்ளது. 
  • ”வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல் 2019” (Global Liveability Index 2019)  ல்  புது தில்லி 118 ஆவது இடத்தையும், மும்பை 119 வது இடத்தையும் பெற்றுள்ளன. பொருளாதார நுண்ணறிவு அமைப்பினால் ( Economist Intelligence Unit(EIU)) வெளியிடப்பட்டுள்ள  இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை  முறையே  வியன்னா, மெல்போஃர்ன் மற்றும் சிட்னி ஆகிய நகரங்கள் பெற்றுள்ளன. 
  • ”சதி” (SATHI - Sophisticated Analytical and Technical Help Institute) என்ற பெயரில்  அறிவியல் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளைப்  பகிர்ந்துகொள்ளக்கூடிய திட்டத்திற்கு ஐ.ஐ.டி டெல்லி மற்றும் ஐ.ஐ.டி. காரக்பூர் ஆகிய கல்வி நிறுவனங்களை மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை தேர்ந்தெடுத்துள்ளது. 
  • ’இ-சிகரெட்டுகள்’ (e-cigarette) பயன்பாட்டை முற்றிலுமாக தடை செய்வதற்கான மத்திய சுகாதாரத்துறையின் பரிந்துரைகளின் மீது முடிவெடுப்பதற்காக  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையிலான பல்வேறு அமைச்சரவைகளின் கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
  • ”வாய்ஸ் இண்டர்நேசனல்” ( ‘VOICE International’) என்ற பெயரில் காலாண்டிற்கொருமுறை வெளியிடப்படும்  பருவ இதழை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. 
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar