--> Skip to main content

TNPSC Current Affairs 7 September 2019

நடப்பு நிகழ்வுகள் 7 செப்டம்பர் 2019
  • சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமாணி ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.  சமீபத்தில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தகில் ரமாணியை, மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மேகாலய மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ததைத்தொடர்ந்து  தகில் ரமாணி இந்த இராஜினாமா முடிவை எடுத்துள்ளார்.
  • அடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிய என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்க அனுமதி கிடையாது என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் அனில் சகஷ்ரபுத்தே தெரிவித்துள்ளார். 
  • சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவை நெருங்கியநிலையில், அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ  அறிவித்துள்ளது.  நிலவிற்கு 2.1 கிலோ மிட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரில் தகவல் துண்டிக்கப்பட்டது.
  • ’யுத் அப்யாஸ்-2019’ (Yudh Abhyas)  என்ற பெயரில் இந்திய ராணுவத்துக்கும், அமெரிக்க ராணுவத்துக்கும் இடையேயான கூட்டுப் பயிற்சி, வாஷிங்டனில் உள்ள லூயிஸ் மெக்கார்டு படைத் தளத்தில் 5-18 செப்டம்பர் 2019 தினங்களில் நடைபெறவுள்ளது. 
  •  கேரள  மாநிலத்தின் 22 வது ஆளுநராக ஆரீஃப் முகமது கான் பதவியேற்றுள்ளார். 
  • பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (பிடிஐ) செய்தி நிறுவனத்தின் தலைவராக, பஞ்சாப் கேசரி பத்திரிகை குழுமத்தின் முதன்மை ஆசிரியரான விஜய்குமார் சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  
  • 22 வது இந்தியா - சர்வதேச கடல் உணவு கண்காட்சி  கொச்சியில் 7-9 பிப்ரவரி 2020 தினங்களில் நடைபெறவுள்ளது. 
  • இந்தியாவின் முதல்  பிளாஸ்டிக் உபயோகமல்லாமல் தயாரிக்கப்பட்ட திரைப்படம் எனும் பெருமையை ’கூலி நம்பர் 1’ ( ‘Coolie No.1’)   எனும் பாலிவுட் திரைப்படம் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை டேவிட் தவான் இயக்கியுள்ளார். 
  • இரண்டாவது சர்வதேச புலிகள் பாதுகாப்பு மன்றம் (International Tiger Conservation Forum ) 2022 ஆம் ஆண்டில் ரஷியாவில் நடைபெறவுள்ளது.  முதலாவது சர்வதேச புலிகள் பாதுகாப்பு மன்றம் ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் கடந்த 2010 ஆம் ஆண்டில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 
  • தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து ரூபெல்லா மற்றும் தட்டம்மை நோய்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கான இலக்காக 2023 ஆம் ஆண்டை உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ளது. 
  • ’இந்தோ-தாய் கார்ப்பட்’ (Indo-Thai CORPAT) என்ற பெயரில் இந்தியா மற்றும்  தாய்லாந்து நாடுகளுக்கிடையேயான கூட்டு இராணுவப்பயிற்சி  5-15 செப்டம்பர் 2019 தினங்களில் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடைபெறுகிறது. 
  • வாடிக்கன்  நாட்டின் ”செயிண்ட் பிரான்சிஸ் அமைதியின் விளக்கு” (Lamp of Peace of Saint Francis ‘ ) எனும் விருது   வங்க தேசத்தைச் சேர்ந்த முகமது யூனுஸ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 
  • ’அறிவியலின் ஆஸ்கர் விருது’ என அழைக்கப்படும் ‘Breakthrough Prize in Fundamental Physics’  விருது  கருந்துளையை  முதன்முதலாக  படமாக தயாரித்த   ‘ஈவண்ட் ஹாரிசான் தொலைநோக்கி’ (Event Horizon Telescope Team) குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. 
  • நார்வே நாட்டிற்கான இந்தியாவின் தூதுவராக பாலா பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 


Newest Post
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar