--> Skip to main content

TNPSC Current Affairs 4 September 2019

நடப்பு நிகழ்வுகள் 4 செப்டம்பர் 2019
  • சென்னை  - ரஷியாவின் விளாடிவோஸ்க் நகர் இடையே சரக்கு போக்குவரத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்து :    ரஷியாவின் விலாடிவோஸ்டோக் நகரில் நடைபெறும் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ரஷியா சென்றுள்ளார்.  அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முன்னிலையில் சென்னை-ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகர் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து உள்பட 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
    • கூ.தக. :  ஏ.கே-203 எனும் ரக துப்பாக்கியை இந்தியா மற்றும் ரஷியா நாடுகள்  இணைந்து தயாரிக்கவுள்ளது. 
  • ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நடைபெற்ற  போராட்டங்களைத் தொடர்ந்து  அந்த மசோதா கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 
  • உலக தேர்தல் ஆணையங்கள் கூட்டமைப்பு தலைவராக சுனில் அரோரா  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.    பெங்களூரில் 3-9-2019 அன்று  நடைபெற்ற உலக தேர்தல் ஆணையங்கள் கூட்டமைப்பின் 4 வது  மாநாட்டில்  இப்பதவிக்கு சுனில் அரோரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
    • கூ.தக.  : உலகில் உள்ள 109 நாடுகளைச் சேர்ந்த 115 தேர்தல் ஆணையங்கள் இணைந்து இந்தக் கூட்டமைப்பு கடந்த 2013-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தென் கொரியாவில் இதன் தலைமையிடம் அமைந்துள்ளது. 
    •  தேர்தல் ஆணையங்களின் பணிகள் குறித்தும், அதை வலுப்படுத்துவது குறித்துமான தகவல்களை அனைத்து நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்தக் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. 
    • இந்தக் கூட்டமைப்பில் தற்போது  115 தேர்தல் ஆணையங்கள் உறுப்பினர்களாக உள்ளன. 20 தேர்தல் ஆணையங்கள் இணை உறுப்பினர்களாக உள்ளன.
  • பில் கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் பிரதமர் மோடிக்கு சர்வதேச இலக்காளர் விருது (Global Goalkeeper Award 2019) : தூய்மை இந்தியா திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த சிறப்பான பங்களிப்புக்காக, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் அவருக்கு சர்வதேச இலக்காளர் விருது வழங்கப்படவுள்ளது.
    • ஐ.நா. சபையால் நிர்ணயிக்கப்பட்டுள்ள நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளைத் தங்கள் நாட்டிலோ அல்லது பல்வேறு நாடுகளிலோ வெற்றிகரமாகச் செயல்படுத்தும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு சர்வதேச இலக்காளர் விருதை பில் மற்றும் மெலிண்டா அறக்கட்டளை வழங்கி வருகிறது குறிப்பிடத்தகக்கது. 
  • அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யாதும் ஊரே திட்டத்தை  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 4-9-19 அன்று தொடங்கி வைத்துள்ளார்.  தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 60 லட்சம் ரூபாய் முதலீட்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தொழில் தோழன் என்ற இணைய அடிப்படையிலான குறைதீர் வழிமுறைகளும் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • HR 5138 b எனப் பெயரிடப்பட்டுள்ள மிக விசித்திரமான சுற்றுவட்டப் பாதையுடன் ஜூபிடருக்கு அருகில் சுழன்று கொண்டிருக்கும் புதிய கோளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  தற்போது ஜூபிடருக்கு (வியாழனுக்கு) வெகு அருகில் சுழன்று கொண்டிருக்கும் அந்தக் கோள் ஜுபிடரைக் (வியழனைக்) காட்டிலும் 3 மடங்கு பெரியது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
  • 2019-ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு இறுதி பரிந்துரைப் பட்டியலில் பிரிட்டன்-இந்திய எழுத்தாளரான சல்மான் ருஷ்டியின் ”குயிஷாட் நாவல்” இடம் பெற்றுள்ளது. 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்பெயின் எழுத்தாளர் செர்வான்டிஸின் டான் குயிக்ஸாட் நாவலைத் தழுவி தனது குயிஷாட் நாவலை சல்மான் ருஷ்டி படைத்துள்ளார்.
    • கூ.தக. :  சல்மான் ருஷ்டி இதற்கு முன்பு மிட்நைட்ஸ் சில்ரன் என்ற தனது முதல் நாவலுக்காக 1981-ஆம் ஆண்டு புக்கர் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரைப் பூர்விகமாகக் கொண்ட சல்மான் ருஷ்டி, மும்பையில் பிறந்தவர். இப்போது பிரிட்டனில் வசித்து வருகிறார்.
  • டி20 ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய மகளிர் ஒருநாள் அணியின் கேப்டனும், மூத்த வீராங்கனையுமான மிதாலி ராஜ்  அறிவித்துள்ளார். 
  • பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய அணியினர் முதலிடம் பெற்று உள்ளனர்.  இதுவரை நான்கு கட்டங்களாக நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் மொத்தம் 16 தங்கம் உள்பட 22 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா.
  • நாகை நம்பியார் நகரில் ரூ.34.30 கோடி செலவில் சிறிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
  •  கே.என்.பாஷா குழு :   கோவையில் உள்ள யுனிவர்செல் டிரேடிங் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற  தனியார் நிதி நிறுவனம் பொது மக்களிடம் வசூலித்த ரூ. 11 கோடியை முதலீட்டாளர்களுக்குத் திரும்ப வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
  • 72 வது உலக சுகாதார அமைப்பின்  தென்கிழக்கு ஆசிய பிராந்திய குழுவின் கூடுகை  2 செப்டம்பர் 2019 அன்று புது தில்லியில் நடைபெற்றது.
  • செப்டம்பர் மாதம்  இந்திய அரசினால் ’போஷன் மாதம்’ / ‘ஊட்டச்சத்து மாதம்’  (“PoshanMaah” / Nutrition Month)   என அனுசரிக்கப்படுகிறது.  
  • முதலாவது ஏசியான் - அமெரிக்க கடற்படை கூட்டுப்பயிற்சி (Asean-US Maritime Exercise (AUMX))   தாய்லாந்து நாட்டின் சாட்டாஹிப்  கடற்படைத்தலத்தில்  2 செப்டம்பர் 2019 அன்று நடைபெற்றது. 
  • 4 வது   தெற்கு ஆசிய சபாநாயகர்களின் கூடுகை (South Asian Speakers’ Summit)  மாலத்தீவு நாட்டில் 1-2 செப்டம்பர் 2019 தினங்களில் நடைபெற்றது. இந்தியாவின் சார்பாக 17வது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் ராஜ்யசபாவின் துணைத்தலைவர் ஹரிவான்ஷ் நாராயண் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். 
  • பெருமதிப்பிலான பணங்களை எண்ணுவதற்கான ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ள இந்தியாவின் முதல் வங்கி எனும் பெருமையை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பெற்றுள்ளது. 
  • உலக எயிட்ஸ், டி.பி மற்றும் மலேரியா நிதியத்திற்கு (Global Fund for AIDS, TB and Malaria (GFTAM)) இந்திய அரசு  22 மில்லியன் டாலர்  நிதியுதவி வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • நிதி தொழில்நுட்பங்கள் தொடர்பாக    ஸ்ரீ அதானு சக்ரபர்த்தி  (Shri Atanu Chakraborty) தலைமையில் அமைக்கப்பட்ட  அமைச்சரவைகளுக்கிடையேயான குழு (Steering Committee on Fintech related issues 2019)  தனது அறிக்கையை  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் 2-9-2019 அன்று சமர்ப்பித்துள்ளது.  
  • 2019-2020 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதத்தின் கணிப்பை முந்தைய கணிப்பான  6.8% த்திலிருந்து   6.2% ஆக    டி.பி.எஸ் வங்கி எனப்படும் சிங்கப்பூர் வளர்ச்சி வங்கி (DBS bank)  குறைந்த்து மதிப்பிட்டுள்ளது.  
  • வங்காளதேசத்திற்கு   அடுத்த 22 ஆண்டுகளுக்கு மின்சார வினியோகம் செய்வதற்கான ஒப்பந்தம்   அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர்  நிறுவனத்திற்கு  கிடைத்துள்ளது.  இதன்படி  அந்நாடு 718 மெகா வாட் மின்சாரத்தை ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திடமிருந்து வாங்குகிறது.  
  • ஆசியாவின் முதல் ஐந்தாம் தலைமுறை   மெய்நிகர் (virtual reality) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன ஓட்டுநர் பயிற்சி மையம் சென்னையில் ரோட்டரி அமைப்பின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. 
  • பாரத் நிலை -6  மாசுகட்டுப்பாட்டு தரத்தில் (Bharat Stage (BS ) VI emission standards)  வாகனங்களைத் தயாரித்துள்ள இந்தியாவின் முதல் வாகனத்தயாரிப்பு நிறுவனம் எனும் பெயரை அசோக் லைலண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. 
    • கூ.தக.  :  1 ஏப்ரல் 2020 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களும்  பாரத் நிலை -6 மாசுகட்டுப்பாட்டு தரத்தை பின்பற்றுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  
  • ஈக்குவடார் குடியரசு (Republic of Ecuador) நாட்டிற்கான இந்தியாவின் தூதுவராக சஞ்சிவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். 
  •  ”கியான்” (“Kian”) என்ற பெயரில்  வெகு தூரமுள்ள இலக்குகளைத் தாக்கவல்ல ஆளில்லா குட்டி போர் விமானங்களை  இரான் நாட்டு இராணுவம் உருவாக்கியுள்ளது. 
  •  “சமுத்திராயான்” (‘Samudrayaan’) என்ற பெயரில் ஆள்கடல் ஆராய்ச்சியை  மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும்  நிறுவனமான, சென்னையிலுள்ள   தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Ocean Technology, Chennai)  2021-2022 காலக்கட்டத்தில் தொடங்கவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • First They Erased Our Name: A Rohingya Speaks” என்ற புத்தகத்தின் ஆசிரியர்  சோபியா ஆன்சல் (பிரஞ்சு பத்திரிக்கையாளர்) 
  • ”நுவாகை” (Nuakhai- harvesting festival) என்ற பெயரில் அறுவடைத் திருவிழா ஒடிஷா மாநிலத்தில்   3-9-2019 அன்று கொண்டாடப்பட்டது.  
  • ஒடிஷாவில் ’ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு’ திட்டம்  1 செப்டம்பர் 2019 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.  


Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar