--> Skip to main content

TNPSC Current Affairs 3 September 2019

நடப்பு நிகழ்வுகள் 3 செப்டம்பர் 2019
  • பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்  சந்திப்பு மாமல்லபுரத்தில்  12-13 அக்டோபர் 2019 தினங்களில் நடைபெறவுள்ளது. முன்னதாக  பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27, 28-ந்தேதிகளில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அங்குள்ள வுகான் நகரில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அந்த பேச்சுவார்த்தையின் போது சீன அதிபர் ஜின்பிங்கை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
  • ‘டோரியன்’ என்ற சக்தி வாய்ந்த புயல்,  செப்டம்பர் முதல்வாரத்தில் தீவு நாடான பஹாமசை தாக்கியுள்ளது. 
  • பாகிஸ்தான் ரெயில் நிலையத்துக்கு குருநானக் பெயர்  :   பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் நான்கானா ரெயில் நிலையத்திற்கு சீக்கியர்களின் முதன்மை குருவான குருநானக் பெயர் சூட்டப்படும் என அந்நாட்டின் இரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.  குருநானக் இந்த நகரில் பிறந்து, இங்கு தான் முதலில் தனது உபதேசத்தை தொடங்கினார். உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களின் பிரபல புனித தலமாக இந்த நகரம் விளங்குகிறது. ‘பாபா குருநானக் ரெயில்’ என்ற புதிய ரெயில் லாகூர்-நான்கானா இடையே விரைவில் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • குல்பூஷண் ஜாதவுடன் முதல் முறையாக இந்திய துணைத் தூதர் சந்திப்பு :   பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை  அந்நாட்டுக்கான இந்திய துணைத் தூதர் கெளரவ் அலுவாலியா 2-9-2019 அன்று  சந்தித்துப் பேசினார். இஸ்லாமாபாதில் உள்ள சிறையில் சுமார் 2 மணிநேரம் வரை இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தியத் தரப்பு அதிகாரி ஒருவர் குல்பூஷணை சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
  • தமிழக அஞ்சல்துறை சார்பில், பேமென்ட்ஸ் வங்கியில் ஆதார் வழி பண பரிவர்த்தனை முறை  03-09-2019 அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது. ஆதார் சார்ந்த பண பரிவர்த்தனை சேவை மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஆதார் இணைக்கப்பட்ட எந்தவொரு வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்துதல், பணம் பெறுதல், நிதி பரிமாற்றம் மற்றும் பண இருப்பை அறிந்து கொள்ளுதல்  போன்ற அடிப்படை வங்கி பரிவர்த்தனைகளை வங்கியின் வர்த்தக முகவர்கள் மூலமாக மேற்கொள்ள முடியும். ஆதார் சார்ந்த பண பரிவர்த்தனை சேவையில் ஆதார் எண் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை உறுதிசெய்வது மூலமாக, பயன்படுத்த எளிதாக இருக்கும். மேலும், இது பாதுகாப்பான தளமாக விளங்குகிறது. 
    • கூ.தக. : இந்திய அஞ்சல்துறை பேமென்ட்ஸ் வங்கி, பிரதமரால் கடந்த 2018 ஆம்  ஆண்டு செப்டம்பரில் தொடங்கி வைக்கப்பட்டது.
  • ”AB-MGRSBY”  (Ayushman Bharat-Mahatma Gandhi Rajasthan Swasthya Bima Yojna)  என்ற பெயரில் புதிய மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தை இராஜஸ்தான் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த திட்டத்தின் மூலம்   பொதுவான நோய்களுக்கு ரூ.30,000 வரையிலும்,    கடுமையான நோய்களுக்கு ரூ.300,000 வரையிலும்   இலவசமருத்துவக் காப்பீடு வழங்கப்படும். 
  • இந்தியாவின் மிக நீளமான மின்சாரமயமாக்கப்பட்ட இரயில் சுரங்கப்பாதை  (6.7 கி.மீ) ஆந்திரப் பிரதேச மாநிலம் செர்லோபாலி மற்றும் ராபூரு (Cherlopalli and Rapuru) இடையே  துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட்டுள்லது.
  • ’இண்டர்ஃபோல்’  ( International Criminal Police Organization (INTERPOL) ) அமைப்பின்  பொதுச் செயலர்  ஜூர்ஜன் ஸ்டாக் ( Jürgen Stock) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை 31 ஆகஸ்டு 2019 அன்று புது தில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  இசந்திப்பின் போது 2022 ஆம் ஆண்டைய ‘இண்டர்போல் பொது சபை கூட்டத்தை’ (INTERPOL General Assembly ) புது தில்லியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • கூ.தக. :  
    • ‘ International Criminal Police Commission’ என்ற பெயரில் 1923 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இண்டர்போல் அமைப்பின் பெயரானது, 1956 ஆம் ஆண்டில் ‘இண்டர்ஃபோல்’ எனப்பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 
    • ‘பாதுகாப்பான உலகத்திற்கு காவல்துறைகளை இணைப்பது’ ( Connecting police for a safer world) என்ற  நோக்கத்துடன் செயல்படும் இவ்வமைப்பின் தலைமையிடம் பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் அமைந்துள்ளது. 
  • ’நமஸ்தே பசுபிக்’ (‘Namaste Pacific’) என்ற பெயரிலான பன்னாட்டு கலாச்சார நிகழ்வு   புது தில்லியில் 27-8-2019 டன்று   ஆஸ்திரேலியா , நியூசிலாந்து, பபுவா குனியா, ஃபிஜி  நாடுகளின் தூதரங்களால் இணைந்து  நடத்தப்பட்டுள்ளது. 
  • ”அக்குவா அக்குவாரியா 2019” ( Aqua Aquaria India)  மாநாடு ஹைதராபாத்தில் 30-08-2019 அன்று ’கடலோரப் பகுதிகளில் நீலப்புரட்சியை உருவாக்குதல்’ (To take Blue Revolution to India’s hinterland) எனும் மையக்கருத்தில்  மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (Marine Products Export Development Authority (MPEDA) )  மூலம் நடத்தப்பட்டது. 
    • கூ.தக. :  உலகளவில் மீன் உற்பத்தில் இந்தியா இரண்டாமிடத்திலுள்ளது (முதலிடத்தில் சீனா உள்ளது) . 2018-2019 ஆம் ஆண்டில் 13.70 மில்லியன் டன் மீன்களை இந்தியா உற்பத்தி செய்துள்ளது.
    • மீன் ஏற்றுமதியைப் பொறுத்தவரையில், இந்தியா உலகளவில் நான்காவது இடத்திலுள்ளது. 
    • கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (Marine Products Export Development Authority (MPEDA) ) தலைமையிடம் கேரள மாநிலம் கொச்சி நகரில் அமைந்துள்ளது. 
  • உக்கிரைன் நாட்டின் புதிய பிரதமராக ஓலெக்சி ஹோங்கோரக் (Oleksiy Honcharuk) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
    • கூ.தக. :  உக்ரைன் நாட்டின் தலைநகர் -’கியேவ்’ (Kiev) | நாணயம் - உக்ரேனியன் ஹிரிவ்னியா (Ukrainian hryvnia) 
  • “India’s Lost Frontier the Story of the North-West Frontier Province of Pakistan”  என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ராகவேந்திரா சிங் 
  • உலக தேங்காய தினம் - செப்டம்பர் 2 


Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar