--> Skip to main content

TNPSC Current Affairs 2 September 2019

நடப்பு நிகழ்வுகள் 2 செப்டம்பர் 2019

  • ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் : 
    • தெலுங்கானா - தமிழிசை சௌந்தரராஜன் 
    • இமாச்சலப் பிரதேசம் -  பண்டாரு தத்தாத்ரேயா
    • ராஜஸ்தான் - கல்ராஜ் மிஸ்ரா 
    • கேரளா - ஆரிஃப் முகமது கான்
    • மகாராஷ்டிரா - பகத் சிங் கோஷ்யாரி
  • ஐ கோர்ட்டு நீதிபதிகள் நியமனம் : 
    • சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் வி.கே.தஹில்ரமானி  மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • சென்னை ஐகோர்ட்டின் மூத்த நீதிபதி எஸ்.மணிக்குமார், கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 
  • தூய்மை இந்தியா திட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் உள்ள  மெலிந்தா கேட்ஸ் நிறுவனம் விருது ஒன்றை வழங்குகிறது.  செப்டம்பர் 2019 மாத இறுதியில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்லும் போது, இந்த விருது வழங்கப்படவுள்ளது.
  • சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் ’விக்ரம்’  02-09-2019 அன்று வெற்றிகரமாக பிரிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.   இந்த லேண்டர் கருவி நிலவின் சுற்றுப்பகுதியின் 100 கி.மீ தொலைவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக நிலவின் சுற்றுவட்ட பாதையிலிருந்து முன்னேறியபடியே, வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவின் தென்பகுதியில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.  
    • கூ.தக. : 
    • நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-2  விண்கலம்,  ஜூலை 22, 2019 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவுகலன் மூலம் விண்ணில்  ஏவப்பட்டது.
    •  பூமியின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான்-2  விண்கலமானது,  ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்க துவங்கியது. 
    • ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம்,  ஆகஸ்ட் 20-ல் நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்து நிலவை சுற்றி வருகிறது.  அதன்பின் நிலவில் தரையிறங்குவதற்காக அதன் சுற்றுவட்ட பாதையின் விட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
    • நிலவைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் சந்திரயான்-2 விண்கலத்தின் இறுதி மற்றும் ஐந்தாவது கட்ட நீள்வட்டப் பாதை குறைப்பு நடவடிக்கையை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக 01-09-2019 அன்று மேற்கொண்டனர்.  
  • இரண்டாம் உலகப் போரின்போது தங்கள் நாட்டுப் படையினர் போலந்து மக்களுக்கு இழைத்த கொடுமைகளுக்கு ஜெர்மனி மன்னிப்பு கோரியது.  அந்தப் போரின்போது, ஜெர்மனி படைகள் போலந்து நாட்டின் வீலுன் நகரில் குண்டுவீச்சு நடத்த ஆரம்பித்த 80-ஆவது ஆண்டு தினத்தையொட்டி அந்த நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெர்மனி அதிபர் ஃபிராங்க்-வால்ட்டர் ஸ்டீன்மீயர் இவ்வாறு மன்னிப்பு கேட்டார்.
    • கூ.தக. :  இரண்டாம் உலகப் போரின்போது, நாஜி ஜெர்மனியின் தாக்குதலில் போலந்துதான் அதிகபட்ச இழப்புகளை சந்தித்ததாக வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். அந்தப் போரில் உலகம் முழுவதும் கொல்லப்பட்ட 5 கோடி பேரில், போலந்து மக்கள் மட்டும் சுமார் 60 லட்சம் பேர் என தெரியவந்துள்ளது. 
  • அமெரிக்காவில் கௌரவம் மிக்க நியமன நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷிரீன் மாத்யூஸின் பெயரை அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
  • தேசிய கார் பந்தயம்: சென்னை வீரர் ராகுல் ரங்கசாமி முதலிடம்  :  கோவை, செட்டிபாளையத்தில் ஜே.கே டயர் சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான கார் பந்தயத்தில் சென்னை வீரர் ராகுல் ரங்கசாமி முதலிடம் பெற்றார்.
  • உலக குத்துச்சண்டை போட்டி - எரிஸ்லேன்டி லாரா சாம்பியன்  : உலக குத்துச்சண்டை சம்மேளனம் சார்பில்  நடைபெற்ற சூப்பர் வெல்டர்வெயிட் போட்டியில் கியூபாவின் எரிஸ்லேன்டி லாரா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 
  • ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சுடும் போட்டியில் மகளிர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில்  இந்தியாவின் யஷ்ஹஸ்வினி சிங் தேஸ்வால் தங்கப்பதக்கத்துடன் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில்  இப்போட்டி நடைபெற்றது.


Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar