--> Skip to main content

TNPSC Current Affairs 4 February 2019

நடப்பு நிகழ்வுகள் 4 பிப்ரவரி 2019
Click Here for Previous Day Current Affairs

தமிழ்நாடு

  • புதுக்கோட்டையில் அமைக்கப்பட்ட, 33.3 அடி உயர செயற்கை பல், கின்னஸ் சாதனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டையைச் சேர்ந்த, பல் டாக்டர் ராஜேஷ்கண்ணன் என்பவர் கின்னஸ் சாதனை முயற்சிக்காக, 33.3 அடி உயரத்தில் செயற்கை பல் ஒன்றை, புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் வடிவமைத்தார். இந்த செயற்கை பல்லை ஆய்வு செய்த, லண்டனைச் சேர்ந்த சுவப்னில் தலைமையிலான கின்னஸ் சாதனை குழுவினர், இதை உலக சாதனையாக நேற்று அறிவித்தனர்.
  • "தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள், 2019" ஐ தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் 4.2.2019 அன்று வெளியிட்டார்.    கூடுதல் விவரங்களுக்கு
    • '102' தாய் சேய் நல வாகன சேவைத்திட்டம் : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் 2013 ஆம் ஆண்டு துவங்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் தற்போது 146 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் சேய்களை அவர்கள் இல்லத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், ஒரு வயதிற்குட்பட்ட உடல்நலம் குன்றிய குழந்தைகளை, சிகிச்சை முடிவடைந்த பிறகு அல்லது தடுப்பூசி அளிக்கப்பட்ட பின்பு , குழந்தைகள் மற்றும் தாய்மார்களை அவர்கள் இல்லத்திற்கு அழைத்து செல்லவும், அரசு மருத்துவ மனைகளில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்பவர்களை அவர்களின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லவும் இந்த ‘102’ தாய் சேய் நல வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
    • தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2019 (Tamil Nadu Solar Energy Policy 2019) ஐ 2.2019 அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டார்.   கூடுதல் விவரங்களுக்கு
      • தமிழகத்தில், ஏழு பல்கலை கழகங்களுக்கான, மத்திய அரசின், 'ரூசா' (Rashtriya Uchchatar Shiksha Abhiyan (RUSA) ) திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.உயர்கல்வி மேம்பாட்டிற்காக, மத்திய அரசு, 'ரூசா' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்திற்கான செலவில், 40 சதவீதத்தை மாநில அரசும், 60 சதவீதத்தை மத்திய அரசும் ஏற்கின்றன. நடப்பு கல்வி ஆண்டுக்கு, சென்னை பல்கலைக்கு, 50 கோடி ரூபாய் உட்பட, பல்வேறு பல்கலை களுக்கும், மத்திய அரசு நிதி உதவி அளித்துள்ளது.இதற்கான துவக்க விழா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக 3-1-2019 அன்று நடந்தது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைகளுக்கும், பிரதமர் மோடி, இந்த திட்டத்தை, வீடியோ கான்பரன்சில் பேசி, துவக்கி வைத்தார்.
        • தமிழகத்தில், சென்னை பல்கலை, அண்ணா, பாரதி யார், பாரதிதாசன், அழகப்பா, மனோன்மணியம் மற்றும் அண்ணாமலை பல்கலைகளின் உள் அரங்குகளில், குறிப்பிட்ட பாடப் பிரிவு மாணவர்கள், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நிகழ்ச்சியை பார்த்தனர். பல்கலைகளின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
      கூ.தக. : ‘ரூஷா’ திட்டத்தைப் பற்றிய முழு விவரங்களுக்கு  http://mhrd.gov.in/rusa

      இந்தியா

      • இந்திய அரசின் புதிய மின் வர்த்தக கொள்கை (New E-commerce Policy) 1 பிப்ரவரி 2019 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
      • சர்வதேச ஆற்றல் முகமையின் ( International Energy Agency) ‘இரயிலின் எதிர்காலம் (The Future of Rail)  என்ற அறிக்கையினை  மத்திய இரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் 30-1-2019 அன்று புது தில்லியில் வெளியிட்டார்.
      • குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்திய அரசால் தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கப் போவதாக மணிப்புரி மொழி முதுபெரும் இயக்குநர் அரிபம் சியாம் ஷர்மா தெரிவித்துள்ளார்.

      உலகம்

      • சீன புத்தாண்டின் இந்த ஆண்டிற்கான சின்னமாக பன்றிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சீனாவில் பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

      முக்கிய தினங்கள்

      • புற்றுநோய் விழிப்புணர்வு தினம் - பிப்ரவரி 4 | மையக்கருத்து(2019) - I am and I willக்ஷ்

      அறிவியல் & தொழில்நுட்பம்

      • மனித விண்வெளி பறக்கும் மையம்  (Human Space Flight Centre) , பெங்களூருவிலுள்ள  ஐ.எஸ்.ஆர்.ஓ - வின் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின்  மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முக்கிய மையமாக இம்மையம் செயல்படவுள்ளது. 
        • ”மனித விண்வெளி பறக்கும் மையத்தின்”  முதல் இயக்குநராக  எஸ்.உன்னிகிருஸ்ணன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
        • ககன்யான் (Gaganyaan) திட்டத்தின் திட்ட இயக்குநராக  ஆர்.ஹட்டன் (R. Hutton) நியமிக்கப்பட்டுள்ளார்.
      Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
      Buka Komentar
      Tutup Komentar