--> Skip to main content

TNPSC Current Affairs 2,3 February 2019

நடப்பு நிகழ்வுகள் 2,3 பிப்ரவரி 2019 
Click Here for Previous Day Current Affairs

தமிழ்நாடு

  • கத்தார் நாட்டில் ஆவின் பால் விற்பனை 02-02-2019 அன்று தொடங்கப்பட்டது. ஏற்கனவே, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் போன்ற வெளிநாடுகளில் ஆவின் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.
  • 'உலக மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்புகள்' எனும் நூல் டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா

  • நாடுமுழுவதும் டிஜிட்டல் டி.வி. வாடிக்கையாளர்கள் விரும்பிய சேனல்களுக்கு மட்டும் கட்டணம் அளித்துப் பார்க்கும் புதிய கட்டணமுறை 1-2-2019 முதல் நடைமுறைக்கு வந்தது.
  • போட்டித் தேர்வுகளில் இருந்து நெகட்டிவ் மதிப்பெண் முறையை  அறவே ஒழிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.
  • 4வது ’சர்வதேச் வாசனைப் பொருட்கள் மாநாடு (International Spice Conference 2019) ஹைதராபாத் நகரில் நடைபெற்றது.
  • டிஜிட்டல் கற்றலை தனது மாநிலத்தில் மேம்படுத்த சிக்கிம் மாநில அரசு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆகியவை 31-1-2019 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.  இதன்படி,  6 முதல் 10 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பாடங்களை வடிவமைப்பதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உதவி புரியும்.
  • பஞ்சாப் மாநில நீர்வாழ் விலங்காக (State aquatic animal)  சிந்து நதி டால்பின் (Indus River Dolphin) அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

  • ஹோவைஷே (Hoveizeh) என்று பெயரிடப்பட்டுள்ல நீண்ட தூரம் தாக்கவல்ல (1300கி.மீ) தரையிலுந்து தரை எல்லையைத்தாக்கும் ஏவுகணையை ஈரான் நாடு 2-1-2019 அன்று வெற்றிகரமாக சோதனைச் செய்துள்ளது.

பொருளாதாரம்

மத்திய அரசின் இடைக்கால பொது பட்ஜெட் 2019:  முக்கிய அம்சங்கள். மத்திய அரசின் இடைக்கால பொது பட்ஜெட் 2019-2020 ஐ   மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் 1 பிப்ரவரி 2019 அன்று தாக்கல் செய்தார்.  பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் வருமாறு, 
  • தனி நபர் வருமான வரி விலக்கு
    • தனி நபர் வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தற்போது ரூ.2.5 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தகக்து.  மேலும், கடந்த இரண்டு நிதியாண்டுகளில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 3.79 கோடியில் இருந்து 6.85 கோடியாக அதிரித்துள்ளது.   மேலும், வருமான வரியில் நிரந்தர கழிவுத்தொகை ரூ. 40 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • 4 லட்சம் ரூபாய் வரையில் வீட்டு வாடகைக்கு வருமான வரி கிடையாது.
    • வங்கி, அஞ்சலக முதலீடுகள் மூலம் கிடைக்கும் ரூ.50,000 வரையிலான வட்டிக்கு வரிபிடித்தம் செய்யப்படாது. இனி 2 வீடுகளுக்கு வீட்டுக் கடன் வட்டி சலுகை வழங்கப்படும். அதாவது, ஒரு சொந்த குடியிருப்புக்கான முதலீடு மூலம் பெறப்படும் ஆதாயங்களுக்கான சலுகை 2 வீடுகள் மூலம் கிடைக்கும் ரூ.2 கோடி வரையிலான தொகைக்கும் நீட்டிக்கப்படும்.
    • மாத சம்பளம் பெறுவோர் செலுத்தும் வீட்டு வாடகைக்கான வரிச்சலுகைக்கான உச்சவரம்பு ரூ.1,80,000-லிருந்து ரூ.2,40,000-ஆக உயர்த்தப்படும்.
    • நியாயமான வாடகை, விற்பனை செய்யப்படாத தளவாடங்களுக்கான வரி விலக்கு காலம், ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும்.
  • விவசாயிகள்
    • 'பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி (Pradhan Mantri KIsan SAmman Nidhi (PM-KISAN)) என்ற திட்டத்தின் கீழ் இரண்டு ஹெக்டேர் அளவு வரை நிலமுள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கப்படும். இதன் மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறும். இந்த 6 ஆயிரம் ரூபாய், 3 தவணைகளாக விவசாயிகளின் வஙகிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்துக்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.20,000 கோடியும், அடுத்த நிதியாண்டில் ரூ.75,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில், வேளாண்மைத் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 981 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2 சதவீத வட்டி தள்ளுபடி அளிக்கப்படவுள்ளது. வட்டியை முறையாக செலுத்தினால் கூடுதலாக 3 சதவீத வட்டி தள்ளுபடி கிடைக்கும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தொழிலாளர் நலன்
    • அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் (Pradhan Mantri Shram Yogi Maandhan scheme): அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 60 வயதுக்குப் பிறகு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் அளிக்கப்படும். இதற்காக தொழிலாளர்களிடம் இருந்து மாதம் 100 ரூபாய் பெறப்படும். அதே அளவு தொகையை மத்திய அரசு தனது பங்களிப்பாக வழங்கும். இது தவிர 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வரி விலக்கு உடைய பணிக்கொடை (கிராஜிட்டி)  ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களால் அடுத்த 5 ஆண்டுகளில் 10 கோடி பேர் வரை பயனடைவர்.
    • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர் பணிக்காலத்தில் இறந்தால், அவரது குடும்பத்துக்கான நலநிதி ரூ.2.6 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    • பணிக்கொடை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
    • தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு 10%ல் இருந்து 14% ஆக உயர்த்தப்படும்.
    • பணி கொடை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • கல்வி
    • 2019-20-ம் ஆண்டு கல்வித்துறைக்கு ரூ.93,847.64 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் உயர் கல்விக்கு ரூ.37,461.01 கோடியும், பள்ளிக்கல்விக்கு ரூ.56,386.63 கோடியும் ஒதுக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் அதிகம்.
    • ‘கல்வியில் புதுப்பிக்கப்பட்ட கட்டமைப்பு மற்றும் நடைமுறை-2022’ என்ற திட்டம் ரூ.1 லட்சம் கோடி மொத்த முதலீட்டில் தொடங்கப்படுகிறது. இதன்மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் சுகாதார கல்வி நிலையங்கள் உள்ளிட்ட முதன்மையான கல்வி நிலையங்களில் ஆராய்ச்சி மற்றும் அதுதொடர்பான கட்டமைப்பு பணிகளில் முதலீடு செய்யப்படும்.
    • பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்த கல்விநிறுவனங்களில் கூடுதலாக 25% இடங்கள் உருவாக்கப்படும்.
  • சுகாதாரம்
    • ஹரியானாவில் நாட்டின் 22வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.
    • இந்தியாவில் ஊரக சுகாதாரம் 98 சதவீதம் உறுதி செய்யப்பட்டு 5.45 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடமில்லாதவையாக மாற்றப்பட்டுள்ளன.
    • 2030க்குள் அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • டிஜிட்டல் இந்தியா
    • அடுத்த 5 ஆண்டில் ஒரு லட்சம் கிராமங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
    • தேசிய செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்கப்படும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் "டிஜிட்டல்' கிராமங்கள் உருவாக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.2030-ஆம் ஆண்டில் இந்தியாவை முழுமையாக டிஜிட்டல் பொருளாதாரமாகவும், டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதி நிறைந்த நாடாகவும் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
    • இது தவிர தேசிய செயற்கை நுண்ணறிவு (ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ட்ஸ்) மையம் அமைக்கப்படவுள்ளது.
    • கூ.தக. : உலகிலேயே செல்லிடப்பேசி மூலம் டேட்டாவை பயன்படுத்துவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் செல்லிடப்பேசி மூலமான டேட்டா பயன்பாடு 50 மடங்கு அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில்தான் செல்லிடப்பேசி அழைப்புகளுக்கான செலவும், டேட்டா செலவும் மிகவும் குறைவாக இருக்கிறது.
  • நெடுஞ்சாலைத்துறை
    • இந்தியாவில் சராசரியாக தினமும் 27 கி.மீ. தெலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது.
  • வங்கி
    • கடந்த 5 ஆண்டுகளில் 34 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
  • பெண்கள் மேம்பாடு
    • பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்
    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற ஏழை தொழிலாளர்களுக்கு 100 வேலை உத்தரவாதம் அளிக்கும் இத்திட்டம் கடந்த 2005-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2014-15-ல் இந்த திட்டத்துக்கு ரூ.37,588 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கப்பட்டு வந்தது. நடப்பு நிதியாண்டில் இந்த திட்டத்துக்கு ரூ.55 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் வரும் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவாக ரூ.60 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • பாதுகாப்புத்துறை
    • மத்திய இடைக்கால பட்ஜெட்டில், நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு ரூ. 3. 05 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட ரூ. 20,000 கோடி அதிகமாகும். மத்திய பட்ஜெட் வரலாற்றில் முதல்முறையாக ரூ. 3 லட்சம் கோடிக்கு அதிகமாக பாதுகாப்பு துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • குறு, சிறு, நடுத்தர தொழில் மற்றும் வணிகர்கள் நலன்
    • ஜிஎஸ்டி பதிவு செய்த சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் தொகைக்கு 3% வட்டி மானியம் வழங்கப்படும். ஒரு கோடி வரையிலான கடன்களுக்கு 3% வட்டி கழிவு வழங்கப்படும்.
    • சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து 25% அளவிற்கு கொள்முதல் செய்யப்படும் அரசு அமைப்புகளுக்கு தேவைப்படும் பொருட்களில் 3% பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்களிடமிருந்துதான் வாங்கப்படுகிறது.
  • கால்நடை வளர்ப்பு
    • பால் உற்பத்தியை அதிகரிக்க காதமதேனு என்ற சிறப்பு திட்டம் கொண்டுவரப்படும்.
    • மீனவர்களின் நலனுக்காக தனியாக மீன்வளத்துறை என்று உருவாக்கப்படும். மீன் வர்த்தகம் மூலம் கடந்தாண்டு 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய பொருளாதாரத்தில் 6.3 சதவீத பங்களிப்பு மீன்வளத்துறை அளித்து வருகிறது.
    • ராஷ்ட்ரிய கோகுல் இயக்கம் : பசுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், உற்பத்தியையும், உற்பத்தித் திறனையும் கூடுதலாக்கவும் “ராஷ்டிரிய காமதேனு ஆயோக்” அமைக்கப்படவுள்ளது.  இந்த அமைப்பு பசுக்களுக்கான சட்டங்களையும், நலத்திட்டங்களையும் கவனித்துக் கொள்ளும்.நாட்டு பசு இனங்களின் பாதுகாப்புக்காக ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இத்திட்ட நிதி கால்நடை நலம் மற்றும் பராமரிப்புத் துறையின் கீழ் செயல்படும் ராஷ்ட்ரிய கோகுல் மிஷனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில், இதற்காக ரூ.301.5 கோடி ஒதுக்கப்பட்டது.
    • தேசிய பசு ஆணையம் (ராஷ்டிரிய காமதேனு ஆயோக்) அமைக்கப்படும்.
    • கால்நடை மற்றும் மீன் வளப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கடனில் 2 சதவீத வட்டி தள்ளுபடி வழங்கப்படும். கால்நடை, மீன்வளர்ப்பு துறையில் கடனை உரிய காலத்தில் செலுத்துவோருக்கு 3 சதவீதம் வட்டி சலுகை .
  • நிதித் திட்டங்கள்
    • 2019-20-க்கான நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி வீத்த்தில் 3.4%ஆக இருக்கும். 3% நிதிப்பற்றாக்குறை என்ற இலக்கு 2020-21-ல் எட்டப்படும். 7 ஆண்டுகளுக்கு முன் 6%ஆக இருந்த நிதிப்பற்றாக்குறை 2018-19 திருத்திய மதிப்பீட்டில் 3.4%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
    • நேரடி வரி வருவாய் ரூ.6.38 லட்சம் கோடியில் இருந்து, ரூ.12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது
    • அரசின் மொத்த செலவீனம் 2019-20 பட்ஜெட் மதிப்பீட்டில் 13% அதிகரித்து ரூ.27 லட்சத்து 84 ஆயிரத்து 200 கோடியாக உள்ளது. 2019-20 பட்ஜெட் மதிப்பீட்டில் மூலதன செலவினம் ரூ.3,36,292 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
    • மத்திய நிதியுதவியுடன் கூடிய திட்டங்களுக்கான ஒதுக்கீடு 2019-20-ல் ரூ.3,27,679 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • தேசிய கல்வி இயக்கத்திற்கான ஒதுக்கீடு 2019-20-ல் 20% அதிகரிக்கப்பட்டு ரூ.38,572 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கான ஒதுக்கீடு 2019-20-ல் 18% அதிகரிக்கப்பட்டு ரூ.27,584 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் ஷெட்யூல்டு பழங்குடியினருக்கான ஒதுக்கீடும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • 2018-19ல் ரூ.56,619 கோடியாக இருந்த ஷெட்யூல்டு வகுப்பினருக்கான ஒதுக்கீடு 35.6% அதிகரிக்கப்பட்டு 2019-20-ல் ரூ.76,801 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • 2018-19-ல் ரூ.39,135 கோடியாக இருந்த ஷெட்யூல்டு பழங்குடியினருக்கான ஒதுக்கீடும் 28% அதிகரிக்கப்பட்டு 2019-20-ல் ரூ.50,086 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • மாநிலங்களுக்கான நிதிஒதுக்கீடு 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக அதிகரிப்படும்.
    • கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 23,900 கோடி டாலர் (சுமார் ரூ.17,05,145 கோடி) அந்நிய நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
  • திரைப்படத்துறை
    • திரைப்பட படப்பிடிப்புகளுக்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்படும்.
  • ஒடுக்கப்பட்ட பிரிவினர்
    • இதுவரை அடையாளம் காணப்படாத சீர் மரபின நாடோடிகள் மற்றும் நாடோடி பழங்குடியினரை அடையாளம் காண நிதி ஆயோக்கின் கட்டுப்பாட்டில் புதிய குழு ஒன்று உருவாக்கப்படும்.
    • சீர் மரபின நாடோடிகள் மற்றும் நாடோடி பழங்குடியினர் மேம்பாடு மற்றும் நலனுக்காக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கட்டுப்பாட்டில் புதிதாக நலவாழ்வு மேம்பாட்டு வாரியம் ஒன்று உருவாக்கப்படும்.
  • ரயில்வே துறை
    • இரயிவே துறைக்கு சுமார் ரூ.65,587 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அகல ரயில் பாதையில் இருந்த ஆளில்லா ரயில்வே லெவல் கிராஸிங் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
  • மத்திய உள்துறைக்கு ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வரும் 2022-ம் ஆண்டில் விண்வெளிக்கு இந்திய வீரர் அனுப்பப்படுவார்.
மேலும் விவரங்களுக்கு :  http://pib.nic.in/PressReleseDetail.aspx?PRID=1562187
  • மத்திய இடைக்கால பட்ஜெட் வரவு - செலவு விவரங்கள் (1 ரூபாயில்)
    • ஒரு ரூபாயில் வரவு
    • அரசின் ஒரு ரூபாய் வருவாயில் 70 பைசா நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் கிடைக்கவுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுகுறித்து அந்த பட்ஜெட் 2019-20-இல் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
    • வரும் நிதியாண்டில் அரசின் ஒவ்வொரு ரூபாய் வருவாயிலும், சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி மூலம் மட்டும் 21 பைசா கிடைக்கும். இதுவே, அரசுக்கு அதிக அளவில் வருவாய் ஈட்டித் தரும் வரியாகும்.
    • இதுதவிர, கடன் வாங்குவதன் மூலம் 19 பைசாவும், ஆயத்தீர்வை மூலம் 7 பைசாவும் கிடைக்கும். பொது நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 8 பைசாவும், கடன் அல்லாத மூலதனங்களைப் பெறுவதன் மூலம் 3 பைசாவும் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
    • நிறுவன வரிகள் மூலம் 21 பைசாவும் வருமான வரி மூலம் 17 பைசாவும் கிடைக்கும். மேலும், சுங்க வரிகள் மூலம் 4 பைசா பெறப்படும்.
  • ஒரு ரூபாயில் செலவு
    • செலவுகளைப் பொருத்தவரை, அடுத்த நிதியாண்டில் மத்திய அரசு செலவிடும் ஒரு ரூபாயில் 23 பைசா, மாநில அரசுகளுக்கு வரிகளைத் திருப்பியளிப்பதற்காக பயன்படுத்தப்படும். கடன்களுக்கான வட்டி செலுத்துவதற்கு 18 பைசா செலவிடப்படும்.
    • பாதுகாப்புத் துறைக்கு 8 பைசா ஒதுக்கீடு செய்யப்படும். இது கடந்த நிதியாண்டில் 9 பைசாவாக இருந்தது.
    • இதுதவிர, மத்திய அரசின் திட்டங்களுக்காக 12 பைசாவும், மத்திய அரசின் உதவி பெறும் திட்டங்களுக்காக 9 பைசாவும் செலவிடப்படும். நிதிக் குழு மற்றும் பிற செலவுகளுக்காக 8 பைசா ஒதுக்கீடு செய்யப்படும்.
    • மானியங்களுக்காக 9 பைசாவும், ஓய்வூதியங்கள் அளிப்பதற்காக 5 பைசாவும் செலவிடப்படும்.
    • பிற செலவுகளுக்காக 8 பைசா செலவிடப்படும் என பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • இஎஸ்ஐ திட்டத்தில் சேர வருமான உச்சவரம்பு ரூ.21,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • பட்ஜெட்டின் வரலாறு :
  • சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் , இந்தியாவின் முதலாவது நிதியமைச்சர் ஆர்.கே . சண்முகம் செட்டி அவர்களால் 26 நவம்பர் 1947 அன்று தாக்கல் செய்யப்பட்டது. குடியரசு இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர் ஜான் மாத்தாய்.
  • அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர் எனும் பெருமையை மொரார்ஜி தேசாய்  (10 முறை) பெற்றுள்ளார். அவரையடுத்து ப.சிதம்பரம் இரண்டாமிடத்தை (8முறை) பெற்றுள்ளார்.
  • பட்ஜெட் தாக்கல் செய் த நாட்டின் முதல் பெண் நிதியமைச்சர் – இந்திராகாந்தி (28 பிப்ரவரி 1970)
  • இரயில்வே பட்ஜெட் மத்திய பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்ட ஆண்டு – 2017
  • மிக நீளமான பட்ஜெட் உரை (18,650 வார்த்தைகள்) வழங்கிய நிதியமைச்சர்  - மன்மோகன்சிங் (1991)
  • மிகக்குறுகிய பட்ஜெட் உரை (800 வார்த்தைகள்) - எச்.எம்.பட்டேல் (1977 ஆம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட்)

  • 2016ம் ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கிடைத்த பலன்கள் - மத்திய நிதி அமைச்சர் வழங்கிய தகவல்கள்
  • வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்ட ரூ.1,600 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டன.
  • பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ரூ.1.35 லட்சம் கோடி மதிப்பிலான கருப்புப் பணம் வெளியே வந்துள்ளது.
  • ரூ.50 ஆயிரம் கோடி கணக்கில் வராத சொத்துக்கள் கண்டறியப்பட்டன.
  • 38 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையும் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
  • இடைக்கால பட்ஜெட் 2019-2020 ல் அறிவிக்கப்பட்டுள்ள மெகா பென்ஷன்  திட்டமான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3,000 ஓய்வூதிய திட்டம்  மற்றும் முந்தைய அடல் பென்ஷன் யோஜனா திட்டங்கள் பற்றி  : (நன்றி - இந்து தமிழ்)
  • பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் என்ற இந்தப் பென்ஷன் திட்டம் பங்களிப்பு முறை பென்ஷன் திட்டமாகும். இதில் 60 வயதாகிவிட்டால் ரூ.3000 மாதப் பென்ஷன் உறுதியாகக் கிடைக்கும் என்பதே பியூஷ் கோயல் பட்ஜெட்டில் அறிவித்தது. இதற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும், 29 வயதில் இந்தத் திட்டத்தில் இணைபவர்கள் மாதம் ரூ.100-ம் 18 வயதில் இணைபவர்கள் மாதம் ரூ.55-ம் பங்களிப்புச் செய்ய வேண்டும். இதே தொகையை அரசும் பங்களிக்கும். இத்திட்டம் மூலம் அமைப்புசாரா துறை தொழிலாளர்கள் 10 கோடி பேர் பயன்பெறுவார்கள், அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பென்ஷன் திட்டமாக இது அமையும்” என்றார் கோயல்.
  • அடல் பென்ஷன் யோஜனா என்பது அருண் ஜேட்லி 2015-ல் அறிவித்த பென்சன் திட்டம். இதுவும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டதுதான். அடல் யோஜனா திட்டத்தின் கீழ்,  பங்களிப்பு செய்த காலத்திற்கேற்ப பென்ஷன் தொகை மாதம் ரூ.1000 முதல் 5000 வரை இருக்கும். இந்தத் திட்டத்தில் சேர குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 40.   18 வயதில் சேர்ந்தால் ரூ.1000 முதல் 5,000 வரையிலான் பென்ஷன் தொகைக்கு முறையே மாதம்  ரூ.42 மற்றும் ரூ210 கட்ட வேண்டும்.  இதே திட்டத்தில் 40 வயதில் சேர்ந்தால் முறையே ரூ.291 மற்றும் ரூ.1,454 தொகை கட்ட வேண்டும். அரசும் 50% பங்களிப்பு செய்யும் அல்லது ஆண்டுக்கு ரூ.1000 பங்களிப்பு செய்யும். அதாவது இதில் எது குறைவோ அதை அரசுப் பங்களிப்பாக பெறலாம். இதிலும் கூட ஜூன் 1, 2015-லிருந்து டிசம்பர் 31, 2015ற்குள் இத்திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் அரசுப் பங்களிப்பு என்ற சலுகை கிடைக்கும்.  மேலும் இது 2019-20 நிதியாண்டு வரைதான் நீடிக்கும்.
  • உலக அளவில் இந்தியப் பொருளாதாரம் : 2013-14-ல் உலக அளவில் 11-வது பெரிய பொருளாதார நாடாக இருந்தது. தற்போது  6-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளது.

நியமனங்கள்

  • மத்திய புலனாய்வு அமைப்பான, சி.பி.ஐ., யின் புதிய இயக்குனராக, மத்திய பிரதேச முன்னாள், டி.ஜி.பி., ரிஷி குமார் சுக்லா(58) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அர்ஜெண்டினா நாட்டிற்கான இந்தியாவின் தூதராக தினேஷ் பாட்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஹோண்டுராஸ் (Honduras) நாட்டிற்கான இந்திய தூதராக B.S. முபாரக் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கொலம்பியா நாட்டிற்கான இந்தியாவின் தூதராக சஞ்சீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

  • முன்னாள் முதலமைச்சர் அண்ணா அவர்களின் நினைவு தினம் - பிப்ரவரி 3 (அண்ணா மறைந்த தினம் - 3 பிப்ரவரி 1969)
  • உலக சதுப்புநில தினம் (World Wetlands Day) - பிப்ரவரி 2 | மையக்கருத்து 2019 - சதுப்பு நிலங்களும் காலநிலை மாற்றமும் (Wetlands and Climate Change)

விளையாட்டுக்கள்  

  • ஐசிசியின் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தானா முதலிடத்தை பிடித்துள்ளார்.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • ஜிசாட்-31’ செயற்கைகோள் : தகவல் தொடர்பு வசதிக்காக ‘ஜிசாட்-31’ செயற்கை கோள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து 6-2-2019 அன்று விண்ணில் ஏவப்படுகிறது.
    • இந்தியாவின் 40-வது தகவல் தொடர்பு செயற்கைகோளாக ‘ஜிசாட்-31’ என்ற செயற்கை கோளானது, பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவ்வில் இருந்து கனரக ஐரோப்பிய ராக்கெட்டான ‘ஏரியன்-5’ மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.
    • ஜிசாட்-31’ செயற்கைகோள் 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்டதாகும்.
    • இதன் ஆயுள் காலம் 15 ஆண்டுகள் ஆகும். இது ‘இஸ்ரோ’வின் ‘1-2கே பஸ்’ வகையின் மேம்படுத்தப்பட்ட செயற்கை கோள்.
    • இதன்மூலம் இந்தியாவின் மையப்பகுதியும், தீவுப்பகுதியும் பலன் அடையும்.
    • ‘ஜிசாட்-31’ செயற்கை கோள், விசாட் நெட்வொர்க், டெலிவிஷன் இணைப்பு, டிஜிட்டல் செயற்கைகோள் செய்தி சேகரிப்பு, டி.டி.எச். டெலிவிஷன் சேவை, செல்போன் சேவை ஆகியவற்றுக்கும் பயன்படும்.
கூ.தக. : கடந்த டிசம்பர் 2018 மாதம்   5 ஆயிரத்து 854 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-11’ செயற்கை கோள், கொரூவ்வில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar