--> Skip to main content

தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள், 2019

  •  "தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள், 2019" ஐ  தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் 4.2.2019 அன்று வெளியிட்டார். 
  • கட்டடம்  மற்றும் மனைப்பிரிவு விதிகளானது, மனைப்பிரிவுகளை நெறிமுறைப்படுத்தவும், கட்டடங்களின் அமைப்பு, உயரம், கட்டுமான பரப்பு, வடிவமைப்பு உள்ளிட்ட கட்டுமானம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஒழுங்குபடுத்தி,  முறையான திட்டமிட்ட இருப்பிடங்கள் அமைவதற்கு உதவுகின்றன. 
  • தற்போது தமிழ்நாட்டில், மனைப்பிரிவு மற்றும் கட்டடத்திற்கு தேவையான அனுமதி பெறுவதற்கான விதிகள், தமிழ்நாடு நகர் மற்றுண் ஊரமைப்பு சட்டம் 1971, சென்னை மாநகராட்சி சட்டம் 1919, தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 மற்றும் பிற மாநகராட்சிகளுக்கான சட்டங்களில் தனித்தனியாக உள்ளன. இந்த விதிகளை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரே தொகுப்பாக  இப்புதிய தமிழ்நாடு ஒரு¦கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள், 2019 உருவாக்கப்பட்டுள்ளது. 
  • இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நகரமைப்பு  செயல் திட்டம் 2016  (New Urban Agenda 2016), மத்திய அரசின் மாதிரி கட்டட விதிகள் (Model Building Bye-Laws), தேசிய கட்டட வழிமுறைகள்  (National Building Code,2016), தேசிய நகர்ப்புற போக்குவரத்து சார்ந்த வளர்ச்சிக் கொள்கை  (National Urban Transit Oriented Policy)    மற்றும் பிற மாநிலங்களில் உள்ள விதிகள் ஆகியவற்றின் சிறப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு  "தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள், 2019"  உருவாக்கப்பட்டுள்ளது.  
  • இப்புதிய விதிகளின் மூலம், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளில் ஒன்றான வீட்டுவசதியை அனைவரும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில், வீடு  கட்டுவதற்காக அனுமதிக்கப்படும் தளப்பரப்பளவு உயர்த்தப்பட்டுள்ளது. 
  • மேலும், பக்க  இடைவெளிகள் குறைக்கப்பட்டு, கட்டடத்தின் உயரமும், தளங்களின் எண்ணிக்கையும்  அதிகரிக்கப்பட்டுள்ளது. 
  • இதன்மூலம், ஏழை எளிய மக்களுக்கும் குறைந்த விலையில்  வீடுகள் கிடைத்திட வாய்ப்புகள் ஏற்படும். அதேநேரத்தில், கட்டட பாதுகாப்பை உறுதி  செய்யவும், விதிமீறல்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அவைகளை தவிர்க்கும் வகையிலும் இந்த  பொது விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. 
  • மேலும், இப்புதிய விதிகளின்படி விண்ணப்பிக்குமுன் முறைகள் மற்றும் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் முறைகள் எளிமையாக்கப்பட்டு, விரைவில் கட்டட அனுமதி அளிக்கும் வகையில் விதிகள் அமைக்கப்பட்டுள்ளது.  
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar