--> Skip to main content

TNPSC Current Affairs 8 January 2019 | நடப்பு நிகழ்வுகள் 8 ஜனவரி 2019

தமிழ்நாடு

  • தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த  பாலகிருஷ்ணா ரெட்டி தமது பதவியை ராஜிநாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பு கே.ஏ.செங்கோட்டையனிடம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.
  • கிராமப்புற ஏழை பெண்களுக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தை வரும் 10 ஜனவரி 2019 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம், அனைத்து ஊராட்சிகளையும் உள்ளடக்கி கிராமப்புற ஏழை பெண்கள் 77 ஆயிரம் பேருக்கு தலா 50 நாட்டுக்கோழி குஞ்சுகளும், அவற்றைப் பாதுகாக்க கூண்டுகளும் வழங்கப்படும்.

இந்தியா

  • குடிமக்கள் சட்ட திருத்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை, 7-1-2019 அன்று ஒப்புதல் அளித்தது.
    • குடியுரிமை சட்ட திருத்த மசோதா, 2016ல், முதன்முதலாக, பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • 'கடந்த, 1971க்கு பின், இந்தியாவுக்குள் நுழைந்த வெளிநாட்டவர், மத பாகுபாடின்றி, நாடு கடத்தப்பட வேண்டும்' என்ற உத்தரவாதத்துடன், 1985ல், அசாம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
    • இந்நிலையில், புதிய, குடிமக்கள் சட்ட திருத்த மசோதா, பாக்., ஆப்கன், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்ந்து, இந்தியாவுக்குள் குடியேறிய, ஹிந்து, சீக்கியர், சமணர், பார்சி, கிறிஸ்துவர்கள், ஆறு ஆண்டுகளுக்கு பின், இந்திய குடியுரிமை பெற அனுமதிக்கிறது. உரிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும், இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இதில், சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்கள், குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.
  • போலாவரம் திட்டம் கின்னஸ் சாதனை : ஆந்திர மாநிலம், கோதாவரி ஆற்றில், மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், போலாவரம் திட்டத்தின் கீழ், அணை கட்டப்படுகிறது. அணையில், 10 ஆயிரத்து, 872 சதுர அடி பரப்பளவில், 24 மணி நேரத்தில், கான்கிரீட் பணிகள், சமீபத்தில் முடிக்கப்பட்டன. இது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
  • பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு, கல்வி-வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய மந்திரிசபை 7-1-2019 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை பொதுப்பிரிவினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு பெற முடியும். அதன்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானம் மற்றும் 5 ஏக்கர் வரை நிலம் கொண்டிருக்கும் பொதுப்பிரிவினர் இந்த இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • ஏற்கெனவே, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இப்போது கூடுதலாக பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படவுள்ளது. இதனால், இடஒதுக்கீட்டு உச்சவரம்பு 60 சதவீதமாக அதிகரிக்கும். இதற்காக அரசியல் சாசனத்தின் 15 மற்றும் 16-வது பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. எனினும், அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் இடஒதுக்கீடு உச்சவரம்பை அதிகரிக்க வழி ஏற்படுத்தப்படும். இந்த மசோதா நிறைவேற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
    • இந்த இடஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் யார்?
      • ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்கள்
      • 5 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்திருப்பவர்கள்
      • 1000 சதுரஅடிக்கு குறைவாக வீடு வைத்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
      • நகராட்சிக்குட்பட்ட இடத்தில் 1000 சதுரஅடிக்கு குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள்
      • நகராட்சி அல்லாத இடத்தில் 2000 சதுரஅடிக்கு குறைவாக வீட்டு மனை வைத்திருப்பவர்கள்
    • விவாகரத்து கோருவதற்கான காரணங்களில் இருந்து தொழுநோயை நீக்க வழிவகுக்கும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் 7-1-2019 அன்று நிறைவேற்றப்பட்டது.
      • தங்களது வாழ்க்கைத் துணைக்கு குணப்படுத்த முடியாத நோய் இருந்தால், கணவனோ அல்லது மனைவியோ விவாகரத்து கோர முடியும். இந்த நோய்களின் பட்டியலிலிருந்து தொழுநோயை நீக்க வகை செய்யும் தனிநபர் சட்டத் திருத்த மசோதா-2018, மக்களவையில் கடந்த ஆகஸ்டில் தாக்கல் செய்யப்பட்டது. தொழுநோயாளிகளுக்கு பாகுபாடு காட்டும் சட்டங்களையும், சட்டப் பிரிவுகளையும் நீக்க வேண்டும் என்ற சட்ட ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.
      • ஹிந்து திருமணச் சட்டம், முஸ்லிம் திருமண முறிவு சட்டம், கிறிஸ்தவர்களுக்கான விவாகரத்து சட்டம், சிறப்பு திருமணச் சட்டம் உள்ளிட்ட தனிநபர் சட்டங்களில் திருத்தம் செய்ய இந்த சட்டம் வழிவகுக்கும்.

  • பேராசிரியர் P பலராம் குழு ( P. Balram Committee) :   ஆராய்ச்சியை மேம்படுத்தவும், தற்போதுள்ள M.Phil/ Ph.D படிப்புகளுக்கான விதிமுறைகளைப்பற்றி ஆராயவும் மத்திய பல்கலைக்கழக மானியக்குழுவினால் (University Grants Commission (UGC)) அமைக்கப்பட்டுள்ள குழு
  • பிரதான் மந்திரி ரோஷ்கார் புரோட்ஷாஷான் யோஜனா (Pradhan Mantri Rojgar Protsahan Yojana (PMRPY)) திட்டத்தின் கீழ் டிசம்பர் 2018 வரையில், 93.38 பணியாளர்கள் பயன்பெற்றுள்ளார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ள்ளது.
கூ.தக. : பிரதான் மந்திரி ரோஷ்கார் புரோட்ஷாஷான் யோஜனா பற்றி ..
  • நிறுவனங்களை, புதிய வேலைவாய்ப்புக்களை தொடங்குவதற்கு ஊக்குவிக்கும் நோக்கோடு தொடங்கப்பட்டுள்ள பிரதான் மந்திரி ரோஷ்கார் புரோட்ஷாஷான் யோஜனா திட்டத்தின் மூலம், பணி அமர்த்தும் நிறுவனங்கள் ஒவ்வொரு பணியாளருக்கும் செலுத்த வேண்டிய ‘இ.பி.எஃப்’ (EPF) இன் முழு பங்களிப்பான 12% த்தையும் மத்திய அரசே செலுத்தி வருகிறது. இந்த பங்களிப்பானது, பணியாளர் வேலைக்கு சேர்ந்தது முதல் முதல் மூன்றாண்டுகளுக்கு மத்திய அரசால் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.   இந்த திட்டமானது ரூ.15,000/- க்கு கீழ் சம்பளம் பெறும் பணியாளர்களை மட்டுமே உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது.
  • இரண்டு புதிய திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அவற்றின் விவரம் வருமாறு,
(i) வாழ்க்கைக்கான திறன் பெறுதல் மற்றும் அறிவு விழிப்புணர்வு திட்டம் (சங்கல்ப்) (Skills Acquisition and Knowledge Awareness for Livelihood (SANKALP)) - மொத்தம் 675 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்திற்காக , உலக வங்கி 500 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்குகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் தரமான  திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அனைவரையும் சென்றடைய செய்வதாகும்.
 (ii) தொழிற்சாலைகளுக்கேதுவான திறன் மேம்பாட்டு திட்டம் (ஸ்டிரைவ்) (Skills Strengthening for Industrial Value Enhancement (STRIVE))  -   உலக வங்கி நிதியுதவியுடன் இந்திய அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் தொழிற்சாலைகளுக்கு தேவையான திறன் மேம்பாட்டுப்பயிற்சிகளை வழங்குவதாகும்.                        
  • இந்திய திறன் கல்வி நிறுவனங்களை (Indian Institute of Skills (IISs)) கான்பூர், மும்பை மற்றும் ஆமதாபாத் ஆகிய மூன்று இடங்களில் அமைப்பதற்கு மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என இந்தியா வந்துள்ள நார்வே பிரதமர் எர்னாசோல்பெர்க் 7-1-2019 அன்று தெரிவித்துள்ளார்.

உலகம்

  • வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் கூட்டணி அபார வெற்றி பெற்றதைத்தொடர்ந்து ஷேக் ஹசீனா 4-ஆவது முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.
  • மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய கிறிஸ்தவ தேவாலயம் எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 7-1-2019 அன்று திறக்கப்பட்டுள்ளது..

பொருளாதாரம்

  • 2011-2012 ஆம் ஆண்டை கருத்தில் கொண்டு கணக்கிடப்பட்டுள்ள முதல் மேம்பட்ட தேசிய வருவாய் கணக்கீடு (2018-2019) ஐ  மத்திய புள்ளியியல் மற்றூம் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய புள்ளியியல் அலுவலகம் (Central Statistics Office (CSO)) வெளியிட்டுள்ளது. இதன் படி,
    • 2018-2019 ஆம் நிதியாண்டில், இந்தியாவில் தனி நபர் வருமானம் (Per Capita Income) - ரூ.1,25,397 . இந்து கடந்த ஆண்டை விட (ரூ.1,12,835) 11.1 % அதிகமாகும். 
    • Gross Domestic Product (GDP) , Gross Value Added (GVA) மற்றும் பிற தகவல்களுக்கு பின்வரும் லின்கிற்கு செல்லவும் http://pib.nic.in/PressReleseDetail.aspx?PRID=1558931
  • கேரள அரசு, பேரிடர் நிவாரண வரியாக (calamity cess) 1% அதிக வரியை இரண்டு ஆண்டுகளுக்கு விதிப்பதற்கு சரக்கு மற்றும் சேவைகள் வரிகள் அமைப்பின் மாநில நிதி அமைச்சர்களின் குழு’ (Group of States’ Finance Ministers (GoFM)) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த குழுவின் தலைவராக பீகாரின் துணை முதலமைச்சர்  சுஷில் குமார் மோடி உள்ளார்.

விளையாட்டு

  • 71 ஆண்டுகளில் முதல்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை கைப்பற்றி கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சாதனை படைத்துள்ளது. ஆஸி. டெஸ்ட் தொடரில் இந்தியா கைப்பற்ற பிரதான காரணமாக இருந்த சேதேஸ்வ் புஜாரா தொடர் மற்றும் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
    • இந்திய அணி கடந்த 1947-48 ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதுவரை ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா கைப்பற்றாமல் இருந்த நிலையில் கோலி தலைமையிலான அணி முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி 71 ஆண்டுகள் காத்திருப்பை முடித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • பிரிஸ்பேன் இண்டர்நேஷனல் 2019” (Brisbane International 2019) டென்னிஸ் போட்டியில் வெற்றியாளர்களின் விவரம்.
    • ஆண்கள் ஒற்றையர் - Nishikori (Japan) |  இரண்டாமிடம் - D. Medvedev (Russia)
    • பெண்கள் ஒற்றையர் - Pliskova (Czech Republic) | இரண்டாமிடம் -L. Tsurenko (Ukrain)
    • ஆண்கள் இரட்டையர் - Daniell (New Zealand) , W. Koolhof (Netherland) |  இரண்டாமிடம் - R. Ram (USA),J. Salisbury (Britain)
    • பெண்கள் இரட்டையர் - Melichar (USA) , K. Peschke (Czech Republic) | இரண்டாமிடம் - H. Chan (Taiwan), L. Chan (Taiwan)

விருதுகள்

  • இன்ஃபோசிஸ் அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கான விருதுகள் 2018 (Infosys Prize 2018 for science and research) ல் விருது பெறுவோர் விவரம்.
  1. பொறியியல் மற்றும் கணினி அறிவியல் (Engineering and Computer Science) - நவகண்ட பட் (Navakanta Bhat), IISc,பெங்களூர்
  2. மானுடவியல் (Humanities) - கவிதா சிங், ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி
  3. உயிர் அறிவியல் (Life Sciences) - ரூப் மாலிக் (Roop Mallik), Tata Institute of Fundamental Research, Mumbai,
  4. கணிதம் (Mathematical Sciences) - நளினி அனந்தராமன், University of Strasbourg, France,
  5. இயற்பியல் அறிவியல் (Physical Sciences) - S.K. சதீஷ், IISc,பெங்களூர்
  6. சமூக அறிவியல் (Social Sciences) - செந்தில் முல்லைநாதன், The University of Chicago Booth School of Business
புத்தகங்கள்
  • ‘A Crusade Against Corruption’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - மனோகர் மனோஜ்

Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar