--> Skip to main content

TNPSC Current Affairs 27 January 2019

நடப்பு நிகழ்வுகள் 27 ஜனவரி 2019
☞   Previous Days' Current Affairs Notes
☞  Today / Previous Days' Current Affairs Quiz

இந்தியா

  • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி 27-1-2019 அன்று அடிக்கல் நாட்டினார். மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. ரூ.1,264 கோடியில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் : சென்னையில் தயாரிக்கப்பட்ட  'ரயில் 18 ' எனும் அதிவேக ரயிலுக்கு, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரயில், டில்லி - வாரணாசி இடையே, மணிக்கு 160 கி.மீ., வேகத்தில், விரைவில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட இந்த ரெயில் தயாரிக்க ரூ.97 கோடி செலவாகியுள்ளது. புல்லட் ரெயில் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ரெயில் 16 பெட்டிகள் உள்ளது.
  • ரோஷினி மொபைல் செயலி (Roshni Mobile App) :  கண் பார்வையற்றோர்  ரூபாய் நோட்டுகளை துல்லியமாக பகுத்தறிவதற்காக ”ரோஷினி” என்று பெயரிட்ட மொபைல் செயலியை ஐ.ஐ.டி, ரோபார்  (Indian Institute of Technology (IIT), Ropar) உருவாக்கியுள்ளது.
  • இணையதள வசதி மற்றும் சிக்னல்கள் இல்லாத இடங்களில் குறுஞ்செய்தி (SMS) மூலம் இணைய தள சேவையை வழங்குவதற்காக  பி.எஸ்.என்.எல் நிறுவனமும்  பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த ‘பி - பவுண்ட் (Be-Bound ) எனும் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

விருதுகள்

  • தமிழக அரசின் குடியரசு தின விழா விருது 2019 பெற்றவர்கள் விவரம் : (நன்றி : தினத்தந்தி)
வீர தீர செயல்
  • வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த மெக்கானிக் நா.சூர்யகுமார் (அண்ணாநகரில் பெண்ணின் தங்கச் சங்கிலியை பறித்து தப்பி ஓடிய கொள்ளையனை துணிச்சலுடன் விரட்டிப் பிடித்தவர்)
  • தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த க.ரஞ்சித்குமார் (குரங்கணி காட்டில் தீ விபத்தில் சிக்கிய 8 பேரைக் காப்பாற்றியதோடு, உரிய நேரத்தில் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தவர்)
  • தஞ்சாவூர் மாவட்டம் மேலையூர் ரா.ஸ்ரீதர் (வெள்ளங்கி ஏரியில் சிக்கிய 3 குழந்தைகள், 3 பெண்களை ஏரியில் குதித்து காப்பாற்றியவர்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
காந்தி விருது
  • கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதில் மெச்சத்தக்க வகையில் பணியாற்றிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரா.வேதரத்தினம் (கடலூர் மாவட்டம்), காவல் ஆய்வாளர் அ.பிரகாஷ் (கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்), காவல் உதவி ஆய்வாளர் கோ.ராஜேந்திரன் (அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம்),
  • சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரெ.திருக்குமார் (திருச்சி, காந்தி மார்க்கெட்), தலைமைக் காவலர் பெ.கோபி (நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம்) ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.
  • திருத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைபிடித்து அதிக உற்பத்தித் திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மைத் துறை சிறப்பு விருது, புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு செட்டியாபட்டியைச் சேர்ந்த செ.சேவியருக்கு வழங்கப்பட்டது.
கோட்டை அமீர் விருது
  • வழக்கமாக, மத நல்லிணக்கத்துக்காக பாடுபட்டவர்களுக்கு கோட்டை அமீர் என்ற பெயரில் விருது வழங்கப்படுவதுண்டு. ஆனால் இந்த குடியரசு தின விழாவில் அந்த விருதைப் பெறும் நபரின் பெயர் அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு (2018) இவ்விருது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, சாதிக்பாஷா என்பவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • மத்திய அரசு அறிவித்த, பத்மஸ்ரீ விருதை ஏற்க, ஒடிசா முதல்வர், நவீன் பட்நாயக்கின் சகோதரி, கீதா மேத்தா, ௭ற்க மறுத்துள்ளார்.
  • சென்னை, குடியரசு தின விழா 2019 ல் பங்கேற்ற, சிறந்த அலங்கார ஊர்திக்கான விருது, செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு வழங்கப்பட்டது.

விளையாட்டுக்கள்  

  • இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் - சாய்னா நெவால் சாம்பியன் :  இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில்  இறுதி ஆட்டத்தில்  ஸ்பெயினின் கரோலினா மரீனை வீழ்த்தி இந்தியாவின்  சாய்னா நெவால் சாம்பியன் பட்டம் வென்றுள்லார்.
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் செக் குடியரசின் குவிட்டோவாவை வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா சாம்பியன் பட்டம் வென்றார்.
  • ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை  செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7-ஆவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். முன்னதாக, ரோஜர் பெடரர் மற்றும் ராய் எமேர்சன் ஆகியோர் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தை 6 முறை வென்றிருந்ததே சாதனையாக இருந்தது.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் சந்திரனுக்கு சென்ற அப்பல்லோ 14 குழுவினர் 33 மணி நேரத்திற்கும் மேலாக சந்திரனின் மேற்பரப்பில் இருந்தனர். சுமார் 43 கிலோ அளவுக்கு நிலவின் பாறைகளை பூமிக்கு கொண்டு வந்து உள்ளனர். அந்த பாறை பூமியில்  தோன்றிய பழமையான பாறையாகும், சுமார் நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது. அதற்கு பிக் பெர்த்தா என்று பெயரிட்டு உள்ளனர்.
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar