--> Skip to main content

TNPSC Current Affairs 10 January 2019 | நடப்பு நிகழ்வுகள் 10 ஜனவரி 2019

தமிழ்நாடு

  • கேரள பிரவாசி பாரதிய திவஸ் அமைப்பின், நிகழாண்டின் சிறந்த மனிதருக்கான விருது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட உள்ளது. கேரளத்தில் ஆண்டுதோறும் பிரவாசி பாரதிய நாள் விழா நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும், சமூகம் மற்றும் அரசியல் பணிகளில் திறம்பட இயங்கி வரும் உள்நாட்டு தலைவர்களுக்கும் சிறந்த மனிதர் என்ற தலைப்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நிகழாண்டின் சிறந்த மனிதர் விருதுக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • Police-E-Eye’ மொபைல் செயலி : போக்குவரத்து விதிமுறை மீறல்கள் குறித்து பொது மக்கள்  காவல் துறையில் நேரடியாக புகாரளிப்பதற்கான மொபைல் செயலியை கோயம்பத்தூர்  போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ளது.

இந்தியா

  • பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்பு (124 வது திருத்த) மசோதா, 2019 (Constitution (One Hundred and Twenty-Fourth Amendment) Bill, 2019) மாநிலங்களவையில் 9-1-2019 அன்று நிறைவேறியது.
  • ‘CARE - Consortium for Academic and Research Ethics’ எனப்படும் புதிய அமைப்பை பல்கலைக்கழக மானியக்குழு ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆராய்ச்சி வெளியீடுகளின் தரத்தை  மேம்படுத்துவதற்காக  இவ்வமைப்பு  ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்திய காடுகள் பணி (IFS - Indian Forest Service) யை  ‘இந்திய காடுகள் மற்றும் பழங்குடியினர் பணி ( Indian Forest and Tribal Service ) என பெயர் மாற்றம் செய்ய  மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை முடிவு செய்துள்ளது.
    • கூ.தக. : இந்தியாவில், இந்திய காடுகள் பணி முதல் முறையாக, அகில இந்திய பணிகள் சட்டம், 1951 (All India Services Act, 1951) -ன் படி ,  1996 ஆம் ஆண்டில்  அறிமுகபடுத்தப்பட்டது.
  • உதான் (UDAN-3 (Ude Desh ka Aam Nagrik) ) திட்டத்தின் கீழ் கடல் விமானங்களை (seaplanes) பயன்படுத்தவிருக்கும் இந்தியாவின் முதல் தீவு எனும் பெருமையை அந்தமான் நிக்கோபார் தீவுகள் பெற்றுள்ளது.
  • இந்தியாவின் 13 வது தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG) of India)   - ராஜிவ் மெஹ்ரிஷி ( Rajiv Mehrishi )

பொருளாதாரம்

  • இந்தியாவில் தனிநபர் சராசரி வருமானம், 7 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும், மத்திய பா.ஜ., ஆட்சியின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 45 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
    • இதுகுறித்து மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளதாவது: தனிநபர் சராசரி வருமானம், கடந்த 2011 - 12ம் நிதியாண்டில் ரூ.63,462 ஆகவும், 2012 - 13ம் நிதியாண்டில் ரூ.70,083 ஆகவும், 2013 - 14ம் நிதியாண்டில் ரூ.79,118ஆகவும் இருந்தது. தொடர்ந்து 2014 - 15(ரூ.86,647), 2015 - 16(ரூ.94,731) மற்றும் 2016-17(ரூ.1,03,870) என அடுத்தடுத்த நிதியாண்டுகளில் அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் 2017 - 18ம் நிதியாண்டில், தனிநபர் சராசரி வருமானம் ரூ.1,12,835 ஆகவும், 2018 - 19ம் நிதியாண்டில் ரூ.1,25,397 ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் தனிநபர் சராசரி வருமானம் இருமடங்காகியுள்ளது.

நியமனங்கள்

  • சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் பதவியேற்பு : சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை, கட்டாய விடுப்பில் அனுப்பி, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அவரை மீண்டும் அப்பொறுப்பில் நியமித்ததை தொடர்ந்து அவர் 9-1-2019 அன்று மீண்டும் பதவியேற்றுள்ளார்.   சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா கடந்த 2017, ஜனவரியில் நியமிக்கப்பட்டார். அவரது 2 ஆண்டு கால பதவிக் காலம் வரும் ஜனவரி  31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுக்கள்  

  • சர்வதேச கிரிக்கெட் கவுண்சிலின் (International Cricket Council (ICC)) 105 வது உறுப்பினராக அமெரிக்க கிரிக்கெட் அணி 8-1-2019 அன்று இணைக்கப்பட்டுள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய பனிக்கிரகம் கண்டுபிடிப்பு : கடந்த ஆண்டு ஏப்ரல் 2018 மாதம் நாசா விண்வெளி ஆய்வு மையமானது, டெஸ் என்ற செயற்கைக்கோளை சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களை கண்டறிய அனுப்பியது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நட்சத்திரங்களில் பூமியைப் போன்ற கிரகங்கள் உள்ளனவா என்பதை ஆராய அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோள், சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய கிரகம் ஒன்றை இந்த செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. இது டெஸ் கண்டுபிடித்த 3-வது கிரகம் ஆகும். இந்த கிரகம் மற்ற 2 கிரகங்களை ஒப்பிடும்போது, 36 நாட்களில் நிதானமாக நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இந்த கிரகத்திற்கு ஹெச்.டி.21749பி என நாசா பெயரிட்டுள்ளது. இதன் மேற்பரப்பு சுமார் 300 டிகிரி பாரன்ஹீட் வரை குளிர்ந்த தன்மையில் இருப்பதும், நட்சத்திரத்திற்கு அருகாமையில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.  
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar