The Hindu பத்திரிக்கை புதிதாக "தி இந்து தமிழ்" என்ற நாளிதழை வெளியிட்டுள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் .
17.09.2013 அன்று, TNPSC புதிய பாடத்திட்டங்களைப் பற்றி விமர்சித்து ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
"டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நுண்ணறிவுத்திறன் (ரீசனிங்) பாடத்திட்டத்தால் கிராமப்புற மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்" என அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 37.5 மதிப்பெண் கிடைக்கும். எனவே, தேர்வில் தேர்ச்சியை நிர்ணயிப்பதில் இந்த பகுதிக்கு முக்கிய பங்கு உண்டு.

இதேபோல், முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு கொண்ட குருப்-2, குருப்-1 தேர்வுகளிலும் ரீசனிங் பகுதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதற்கு கணிசமான மதிப்பெண் ஒதுக்கப்பட்டு இருப்பதால் இந்த பகுதியில் குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு செல்ல முடியாது.
அரசுக்கு கோரிக்கை
கிராமப்புற மாணவர்களின் பாதிப்பை கருத்தில் கொண்டு ரீசனிங் பாடத்திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யலாம். அல்லது ரீசனிங் பாடத்திட்டத்தை எதிர்கொள்ள கிராமப்புற மாணவர்கள் தயாராக வேண்டும். இதில் எது நடந்தாலும் விரைவாக நடக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
நன்றி : www.tamil.thehindu.com
முழு செய்தியையும் படிக்க : www.tamil.thehindu.com