--> Skip to main content

தமிழ் வழியில் படியுங்கள், அரசு வேலை பெறுங்கள்

தமிழ் நாடு அரசு நடத்தும் TNPSC தேர்வுகளில் தமிழ் வழிப் படித்தவர்களுக்காக் 20 % சிறப்பு இட ஒதுக்கீடு 2010 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது அந்த தேர்வுக்குரிய  தகுதியை தமிழ் வழியாகப் பெற்றிருந்தாலே இந்த இட ஒதுக்கீட்டை பெற முடியும். உதாரணமாக TNPSC Group 1, Group 2 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இருக்கிறீர்கள் என்றால் தமிழ் வழி படித்தோருக்கான இட ஒதுக்கீட்டை  பெறுவதற்கு நீங்கள் உங்கள்  பட்டப்படிப்பை தமிழ் வழியாக படித்திருக்க வேண்டும். (SSLC , மற்றும் HSC மட்டுமே தமிழ் வழிப் படித்துவிட்டு  பட்டப்படிப்பை ஆங்கிலத்தில் படித்திருந்தால்  நீங்கள் Degree Standard தேர்வுகளில்  இட ஒதுக்கீட்டைக் கோர முடியாது) . அதற்காக ஆங்கிலத்தைப்  புறக்கணிக்க முடியுமா ? என கேட்கலாம். இந்த காலக்கட்டத்தில் ஆங்கில அறிவு என்பது நாம் தேடிச் செல்ல வேண்டியது இல்லை, நம் அன்றாட வாழ்க்கையில் நம்மோடு ஒன்றி வந்து விடும். அன்றாடம் ஆங்கில நாளிதழ்கள், புத்தகங்கள் படிப்பதன் மூலம் ஆங்கில அறிவில் நாம் தேற முடியும். ஏற்கனவே ஆங்கில வழியில் பட்டப் படிப்புகளை படித்து முடித்தவர்களுக்கும், படித்துக் கொண்டிருக்கிறவர்களுக்கும் இதனால் எந்த நன்மையும் நமக்கு வரப்போவதில்லை. ஆனால் இனிவரும் நமது சந்ததியினரை நாம் வழிகாட்டலாமே.

பொறியியல் படிப்புகளில் இட ஒதுக்கீடு 
 
தற்போது  கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அண்ணாப்  பல்கலைக்கழகத்தில்  தமிழ் வழியாக பொறியியல் (BE) படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சுமார் 100 மாணவர்கள்  தமிழ் வழியாக பொறியியல் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். TNPSC தேர்வுகளில்  Group 2 தேர்வுகள் மற்றும் பொறியாளர் பதவிகளுக்கு  BE படிப்பு படித்தவர்களுக்கென்றே தனியாக சில பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பதவிகளுக்கு போட்டியிடும் போது தமிழ் மொழி மூலம் BE படித்திருந்தீர்கள் எனில் எளிதாக வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

எனவே அரசு வேலை தான் உங்கள் இலக்கு எனில் BA, BSc, BCom, BE என எந்த பட்டப் படிப்பானாலும் நீங்கள் அதை  தமிழ் மொழி வழியாக படித்தால் சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது.


Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar