நடப்பு நிகழ்வுகள் 1 செப்டம்பர் 2019
- இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் (Border Security Force) தலைவராக விவேக் குமார் ஜோரி பதவியேற்றுள்ளார்.
- கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பொன் விழா கொண்டாட்டத்தை 2 செப்டம்பர் 2019 அன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தில்லியில் தொடக்கி வைத்தார். கன்னியாகுமரியில் கடலில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு 1970-ஆம் ஆண்டு செப். 2-ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ’இப்போஸ்’ (Ipsos) நிறுவனம் நடத்திய உலக மகிழ்ச்சி கணக்கெடுப்பில் (Global Happiness Survey) 28 முக்கிய சந்தை நாடுகளில் இந்தியா 9 வது இடத்தை பெற்றுள்ளது. இப்பட்டியலில் முதல் இடத்தை ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளும், இரண்டாம் இடத்தை சீனாவும், மூன்றாம் இடத்தை இங்கிலாந்தும், நான்காம் இடத்தை பிரான்ஸ் மற்றும் ஐந்தாம் இடத்தை அமெரிக்காவும் பெற்றுள்ளன.
- ”டிஜிட்டல் இந்தியாவிற்கான கட்டமைப்பு” (Build for Digital India) எனும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் கூகுள் (Google) நிறுவனமும் 31-8-2019 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
- கூ.தக. : ”டிஜிட்டல் இந்தியாவிற்கான கட்டமைப்பு” எனும் திட்டத்தின் மூலம் விவசாயம், மருத்துவம் , கல்வி, உட்கட்டமைப்பு, பெண்கள் பாதுகாப்பு, ஸ்மார்ட் நகரங்கள் ஆகிய துறைகளில் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கல்லூரி மாணவர்களிடமிருந்து பெறுவதற்கு ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்ப்பட்டுள்ளன. நாடு முழுவதிலுமுள்ள பொறியியல் மாணவர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்கலாம்.
- 36 வது தேசிய விளையாட்டு போட்டிகள் 20 அக்டோபர் 2020 முதல் 4 நவம்பர் 2020 வரையில் கோவாவில் நடைபெறவுள்ளன.
- குழு தாக்குதல் தடுத்தல் மசோதா 2019 ((Prevention of Lynching) Bill, 2019) மேற்கு வங்க மாநில சட்டமன்றத்தில் 30 ஆகஸ்டு 2019 அன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.