TNPSC Current Affairs 5,6 January 2019
☞ Previous Days' Current Affairs Notes |
☞ Today / Previous Days' Current Affairs Quiz |
தமிழ்நாடு
- சர்வதேச உவர்நீர் மீன்வளர்ப்பு குறித்த மாநாடு சென்னையில் வரும் ஜன.22-ஆம் தேதி தொடங்கவுள்ளது. 30 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தொடங்கிவைக்கிறார்.
- பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5-1-2019 அன்று தொடங்கி வைத்தார்.
- மதுரையில் 5 கோடி ரூபாய் மதிப்பில் தமிழன்னை சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா
- ‘வாருங்கள் வாழ்ந்து காட்டலாம்’ என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் குழந்தைப்பருவத்தை மையப்படுத்தி இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ள குறும்படம் தமிழ் மொழியிலும் 6-1-2019 அன்று வெளியிடப்பட்டது. மகேஷ் அதவாலா டைரக்ஷனில், 30 நிமிடங்கள் ஓடக் கூடிய குறும்படத்தை ‘லைகா’, ‘டிவோ’ ஆகிய நிறுவனங்கள் மற்றும் மகாவீர் ஜெயின் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
- ”இண்டஸ் உணவு கூடுகை 2019” (Indus Food Meet 2019) 14-15 ஜனவரி 2019 தினங்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறுகிறது.
- 25 ஆயிரம் வீடுகளின் புதுமணைப் புகுவிழா (collective e-Grih Pravesh) : இ-கிரகப்பிரவேசத்தை பார்வையிட்ட : ஜார்க்கண்ட் மாநிலம் பலாமுவில் ஒட்டுமொத்தமான இ-கிரகப்பிரவேசத்தை பிரதமர் பார்வையிட்டு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது, பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் 25,000 பயனாளிகள் புதுமணைப் புகுந்ததை, இ-கிரகப்பிரவேசம் முறையில் அவர் பார்வையிட்டார்.
- ”ஸ்வச் சர்வேக்ஷான் 2019” (‘Swachh Survekshan 2019’) என்ற பெயரில் நான்காவது தேசிய அளவிலான தூய்மை கணக்கெடுப்பை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகார அமைச்சர் ஹர்தீப் பூரி அவர்கள் 4 ஜனவரி 2019 அன்று துவங்கி வைத்தார். 4-28 ஜனவரி 2019 தினங்களில் நடைபெறும் இந்த கணக்கெடுப்பானது 4237 நகரங்களில் நடைபெறுகிறது.
- ஆதார் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் : வங்கி கணக்கு தொடங்கவும், செல்லிடப்பேசி இணைப்பு பெறுவதற்கும் ஆதாரை விருப்பத்தின் பேரில் அளிக்க அனுமதிக்கும் ஆதார் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் 5-1-2019 அன்று நிறைவேற்றப்பட்டது.
- முன்னதாக, ஆதார் தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஆதார் திட்டம், அரசமைப்புச் சட்டப்படி செல்லும்; பான் கார்டு, வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதார் கட்டாயம் என்று தெரிவித்தது.
- அதேவேளையில், வங்கி கணக்கு, செல்லிடப்பேசி இணைப்பு, பள்ளி மாணவர்களின் சேர்க்கை ஆகியவற்றுக்கு ஆதார் கட்டாயமில்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- இத்தீர்ப்பின் அடிப்படையில், ஆதார் மற்றும் அதுசார்ந்த மேலும் இரு சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான மசோதா, மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கி கணக்கு தொடங்கவும், செல்லிடப்பேசி இணைப்பு பெறுவதற்கும் ஆதாரை விருப்பத்தின் பேரில் இணைக்க இந்த மசோதா அனுமதிக்கிறது. ஆதார் இல்லை என்பதற்காக மேற்கண்ட சேவைகள் மறுக்கப்பட கூடாது என்பதை உறுதி செய்யும் இந்த மசோதா, ஆதார் தகவல் பயன்பாட்டு விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கவும் வழிவகை செய்கிறது.
- குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் உள்ள வல்லபபாய் படேலின் சிலை(ஒற்றுமைக்கான சிலை) அமைப்பதற்கு மத்திய அரசு சார்பில் ரூ. 300 கோடி வழங்கப்பட்டதாக மக்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ’திருவாங்கூர் உரங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் நிறுவனத்தின்” (Fertilisers and Chemicals Travancore Limited (FACT)) தலைமையிடம் கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம், 1943 ஆம் ஆண்டு மஹாராஜா ஸ்ரீஇ சித்திர திருநாள் பலராம வர்மாவினால் துவங்கப்பட்டது. இந்த நிறுவனம், சுதந்திர இந்தியாவின் முதல் அரசு உர நிறுவனம் எனும் பெருமையையும் பெற்றுள்ளது.
- தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு (Children Science Congress) 4-5-2019 அன்று பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில், நோபல் பரிசு பெற்ற இஸ்ரேலிய அறிவியல் அறிஞர் ‘அவ்ரம் ஹெர்ஷ்கோ’ ( Avram Hershko) மற்றும் அமெரிக்காவின் டங்கன் எம் ஹால்டேன் ( Duncan M.Haldane) ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.
- இந்தியாவின் இன்றைய நவீன தொழில்நுட்பங்களை எதிர்கால சந்ததி அறியும்பொருட்டு, 100 பொருட்களை அடங்கிய “டைம் காப்சியூல்” (Time Capsule) ஜலந்தரிலுள்ள லவ்லி பல்கலைக்கழகதில் புதைக்கப்பட்டன. இந்திய அறிவியல் மாநாட்டின் ஒருபகுதியாக இந்நிகழ்வு நடைபெற்றது.
- 6வது, ‘இந்திய பெண்கள் இயற்கை விவசாய விழா’ (Women of India Organic Festival) சண்டிகாரிலுள்ள லெஷர் வேலி (Leisure Valley) எனுமிடத்தில் 12-14 ஜனவரி 2019 தினங்களில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வை, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நடத்துகிறது.
- 5 மாநிலங்களில், அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடப்படுகின்றன : செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக குஜராத்தின் ஆமதாபாத், தெலுங்கானாவின் ஐதராபாத், உத்தரப்பிரதேசத்தின் லக்னோ, கேரளாவின் திருவனந்தபுரம், மேகாலயாவின் சில்லாங் ஆகிய 5 மண்டலங்களில் செயல்பட்டு வரும் அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடப்படுகின்றன
- தேசிய மாணவர் படையின் (National Cadet Corps) இயக்குநர் ஜெனரல் - லெப்டினண்ட் ஜெனரல் P P மல்கோத்ரா ( Lt Gen P P Malhotra)
உலகம்
- பிள்ளைகள் தங்கள் வருமானத்தில் 5 முதல் 10 சதவீதம் வரை பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவதை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்ற நேபாள அரசு முடிவு செய்துள்ளது.
- சீனாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தொகை தற்போது குறைந்துள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதன்மையான நாடாக சீனா விளங்குகிறது. அதிக மக்கள் தொகையால் பல்வேறு இன்னல்களை சந்தித்த அந்நாடு ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்பது உள்பட பல கடுமையான விதிமுறைகளை கடந்த 10 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது.இதன் காரணமாக கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு முதன்முறையாக அங்கு மக்கள் தொகை குறைந்துள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னர் ஆண்டுக்கு 25 லட்சமாக இருந்த குழந்தை பிறப்பு இப்போது ஆண்டுக்கு 7 லட்சத்து 90 ஆயிரமாக குறைந்துள்ளது.
வெளிநாட்டு உறவுகள்
- பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள பழங்கால இந்து மத தலமான ‘பஞ்ச தீர்த்தம்’ (Panj Tirath) தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
- இந்தோனேஷியாவை சேர்ந்த ஆசிய பல்ப் மற்றும் பேப்பர் என்ற தனியார் நிறுவனம், ஆந்திராவில் ரூ.24, 500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்வதுடன், உலகளவில், ஒரே இடத்தில் பெரிய பேப்பர் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ரமயபட்டினம் என்ற இடத்தில்,ஆண்டிற்கு 5 கோடி டன் பேப்பரை அரைக்கும் அளவு வசதி கொண்ட தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.
- இந்தியா - ஈரான் இடையே எண்ணை கொள்முதலின்போது, இந்திய ரூபாயைக் கொண்டு செய்யப்படும் பணபரிமாற்றங்களின் மீதான வரிக்கு இந்திய அரசு விலக்கு அளித்துள்ளது.
- கூ.தக. : 2-11-2018 அன்று இந்தியா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி, இந்தியா- ஈரான் எண்ணை வணிக பண பரிமாற்றங்கள் பொதுத்துறை வங்கியான ‘யூகோ வங்கியின்’ ( UCO Bank ) மூலம் இந்திய ரூபாய் பணத்தைக் கொண்டு செய்யப்பட இரு நாடுகளும் சம்மத்தித்தது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரம்
- தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி (‘fugitive economic offender’) என அறிவிக்கப்பட்ட முதல் நபர் விஜய் மல்லையா : வங்கிக் கடன் பெற்றுவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. பொருளாதாரக் குற்றவாளி என்பதால் மல்லையாவின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யலாம் என்றும், மல்லையா மேல்முறையீடு செய்ய அவகாசம் ஏதும் அளிக்க முடியாது என்றும் மும்பை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- இந்திய அரசின் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகர் - கிருஸ்ணமூர்த்தி சுப்ரமணியன் (Krishnamurthy Subramanian)
- 15 வது நிதிக்குழுவின் தலைவர் - N.K. சிங் (N.K. Singh)
- ’ஆசிய போட்டி நிறுவனம்’ (Asia Competitiveness Institute’s (ACI)) வெளியிட்டுள்ள எளிதாக தொழில் துவங்கக்கூடிய இந்திய மாநிலங்கள் பட்டியல் 2018 ( Ease of Doing Business (EDB) index 2018 ) ல் ஆந்திரப்பிரதேச மாநிலம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. மஹாராஷ்டிரா மற்றும் புது தில்லி ஆகியவை முறையே 2 மற்றும் 3 ம் இடங்களைப்பெற்றுள்ளன.
விருதுகள்
- 'நியூஸ் 18 தமிழ்நாடு' தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர், குணசேகரனுக்கு, 'ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது 2017' : இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர், ராம்நாத் கோயங்கா நினைவுகளை போற்றும் வகையில், 2004 முதல், ஒவ்வொரு ஆண்டும், ஊடகத்துறை சாதனையாளர்களுக்கு, 'ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது' வழங்கப்படுகிறது.
- பத்திரிகையாளர்களின் நேர்மையான, மிகச் சிறப்பான பங்களிப்பை போற்றும் வகையில், இந்த விருது வழங்கப்படுகிறது.
- பிராந்திய மொழியில், ஒரு நிகழ்வு அல்லது மக்கள் பிரச்னையை, விரிவாக, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், பதிவு செய்யும், அச்சு மற்றும், 'டிவி' ஊடகவியலாளருக்கு, இவ்விருது வழங்கப்படும்.அதன்படி, 2017ம் ஆண்டுக்கான விருதுகளில், பிராந்திய மொழிகளில் சிறந்து விளங்கிய, ஊடகவியலாளர் விருதுக்கு, 'நியூஸ் 18 தமிழ்நாடு' முதன்மை ஆசிரியர் குணசேகரன் தேர்வு செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில், 2017ல், 'ஒக்கி' புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மீனவர்கள் சந்தித்த துயரங்களை, தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வந்ததற்காக, விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்
- அண்டார்டிக்காவின் மிக உயர்ந்த சிகரமான மவுண்ட் வின்ஷனை ஏறியுள்ள, கைகளற்ற (amputee) முதல் இந்திய பெண் எனும் பெருமையை அருணிமா சின்கா பெற்றுள்ளார்.
விளையாட்டுக்கள்
- புரோ கபடி லீக் சீசன் 6-இல் பெங்களூரு புல்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
- தேசிய பள்ளிகள் விளையாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் 64-ஆவது தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக அணி 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது. சிறுமியர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் தமிழகத்தின் ஸ்வேதா ஸ்டெப்பி வெள்ளி பதக்கம் வென்றார். மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் தமிழக வீராங்கனை வி.கெüஷிகா வெண்கலம் வென்றுள்ளார்.
- டாட்டா ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா-திவிஜ் சரண் இணை , பிரிட்டனின் லூக் பாம்பிரிட்ஜ்-ஜானி ஓமரா இணையை வென்று, முதல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஏடிபி போட்டிகளில் ஒன்றான டாட்டா ஓபன் 2019 பூனேவில் நடைபெற்றது.
- ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்துள்ள முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எனும் பெயரை ரிஷப் பாண்ட் (Rishabh Pant) பெற்றுள்ளார்.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
- 5-13 ஜனவரி 2019 தினங்களில் நடைபெறும், 27வது புது தில்லி உலக புத்தகக் கண்காட்சியின் (New Delhi World Book Fair) போது மத்திய தகவல் ஒலிபரப்புட்துறையின் வெளியீட்டு பிரிவினால் பின்வரும் ஏழு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
- Bapu ke ashirwaad - மஹாத்மா காந்தியின் எண்ணங்கள் மற்றும் எழுத்துக்கள் அவரின் சொந்த கையெழுத்தில்
- 2500 years of Buddhism - முன்னாள் குடியரசுத்தலவர் டாக்டர் . ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகம் , முதல்முறையாக 1956 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
- Portraits of Strength - பிரதமர் மோடியினால், மான் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் புகழப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்திய இந்திய பெண்களைப்பற்றியது.
- Hindi Swadesh mein aur Videsh Mein - இந்தி மொழி மற்றும் இலக்கியம் பற்றியது.
- Rang Birangi Kahaniya - குழந்தைகளுக்கான புத்தகம்
- Badal ki Sair – முனிஷி பிறேம்சந்தின் கதை சொல்லும் வடிவிலான குழந்தைகளுக்கான சிறுகதைகள்
- Aao Paryavaran Bachayen aur Dhra ko Swarg Bnayen - சுற்றுசூழல் பாதுகாப்புப் பற்றியது