Current Affairs 16 January 2019
☞ Previous Days' Current Affairs Notes |
☞ Today / Previous Days' Current Affairs Quiz |
தமிழ்நாடு
- மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 10 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் பிரபாகரன் முதல் பரிசையும், 9 காளைகளை பிடித்த அஜய் 2வது பரிசையும், 8காளைகளை பிடித்த கார்த்திக் 3வது பரிசையும் வென்றனர்.
இந்தியா
- 20 ஜனவரி 2019 ம் தேதி சந்திர கிரகணத்துடன் கூடிய ‘சூப்பர் ப்ளட் மூன்’ என்ற அதிசயம் : இந்திய நேரப்படி ஜனவரி 20ந் தேதி நள்ளிரவு 11 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் காலை வரை இது நீடிக்கும் இந்த சந்திர கிரகணம் அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்ரிக்கா போன்ற நாட்டு மக்களால் தெளிவாகக் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உயர் வகுப்பினரில் ‘பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான10 % இட ஒதுக்கீடு 2019-2020 கல்வியாண்டு முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கையில் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
- 'ஏகலைவா மாதிரி உண்டு உறையுள் பள்ளிகளின்’ (Eklavya Model Residential Schools (EMRS)) மாணவர்களுக்கான முதலாவது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 15 ஜனவரி 2019 அன்று ஹைதராபாத்தில் தொடங்கின. ஆறாவது, ‘இந்திய பெண்கள் இயற்கை விவசாயத் திருவிழா’ (Women of India Organic Festival) 11 ஜனவரி 2019 அன்று சண்டிகாரில் நடைபெற்றது.
- தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் (National Institute of Public Cooperation and Child Development(NIPCCD)) சண்டிகாரிலுள்ள மொஹாலியில் 14 ஜனவரி 2019 அன்று மத்திய குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா சஞ்சய் காந்தி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
நியமனங்கள்
- சுப்ரீம் கோர்ட்டில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆக மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பதவி ஏற்ற நாளில் இருந்து 2020 ஜூன் 30 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை பதவியில் இருப்பார்.
- சுப்ரீம் கோர்ட்டிற்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம் : டில்லி ஐகோர்ட் நீதிபதியான சஞ்சீவ் கன்னா, கர்நாடகா ஐகோர்ட் தலைமை நீதிபதி தினேஷ் மகேஷ்வரி ஆகியோர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டு
- இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர், உலகின் 2-வது இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற சாதனையை சென்னையைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன் குகேஷ் நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம், இதற்கு முன்னர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது பிரக்ஞானந்தாவின் ‘இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர்’ எனும் சாதனையை முறியடித்துள்ளர். 17-வது தில்லி சர்வதேச ஓபன் செஸ் போட்டியில், கிராண்மாஸ்டருக்கான 3-வது தகுதியை அடைந்து கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார் குகேஷ். இதன்மூலம் இந்தியாவின் 59-வது கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார்.
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமைப்பின் அடுத்த தலைமைச் செயல் அதிகாரியாக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த மனு சாவ்னே தேர்வாகியுள்ளார். இவர், பிப்ரவரி 2019 முதல் பணியில் இணையவுள்ளார். எனினும் ஜூலையில்தான் தனக்கான பதவியில் அதிகாரபூர்வமாக அமர்த்தப்படவுள்ளார். 2019 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு டேவிட் ரிச்சர்ட்சன் பதவியிலிருந்து விலகவுள்ளார். அவருக்குப் பிறகு மனு, அப்பதவியை வகிக்கவுள்ளார்.
பொருளாதாரம்
- ரியல் எஸ்டேட் துறையில் சரக்கு மற்றும் சேவைகள் வரி வருவாயை அதிகரிக்கச் செய்வதற்காக ஏழு நபர்கள் கொண்ட அமைச்சர்கள் குழு குஜராத் துணை முதல்வர் நிதின் பட்டேல் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய தினங்கள்
- 71 வது இந்திய தரைப்படை தினம் (Indian Army Day) - ஜனவரி 15
விருதுகள்
- ’பிராங்கோ - ஜெர்மன் மனித உரிமை மற்றும் சட்டத்தின் ஆட்சி விருது 2018’ (Franco-German Prize for Human Rights and the Rule of Law for 2018) சீன வழக்கறிஞர் யூ வென்ஷெங்-கிற்கு (Yu Wensheng) வழங்கப்பட்டுள்ளது.