--> Skip to main content

TNPSC Current Affairs 03 January 2019 | நடப்பு நிகழ்வுகள் 03 ஜனவரி 2019

TNPSC Current Affairs 03 January 2019
☞   Previous Days' Current Affairs Notes
☞  Today / Previous Days' Current Affairs Quiz
தமிழ்நாடு
  • மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு 27-1-2019 அன்று அடிக்கல் நாட்டும் பிரதமர் நரேந்திர மோடி, அன்றைய தினம் மதுரை-சென்னை இடையே அதிநவீன தேஜஸ் ரெயில் போக்குவரத்தையும் தொடங்கி வைக்கிறார்.
  • சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரை வைக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்தியா 
  • "தேசிய சுகாதார முகமை” (National Health Agency)யை “தேசிய சுகாதார ஆணையமாக” (National Health Authority)  மாற்றியமைப்பதற்கு மத்திய அமைச்சரவை 2-1-2019 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.  ‘பிரதான் மந்திரி - ஜன் ஆரோகியா யோஜனா’ (Pradhan Mantri - Jan Arogya Yojana (PM-JAY))  எனப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை சிறந்த முறையில் நடைமுறைபடுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
  • பொதுத்துறை எண்ணைய் நிறுவனங்களின் சார்பில் “எண்ணெய், எரிவாயு மற்றும் எரிசக்தி சிறப்பு மையம்” (Centre of Excellence in Oil, Gas and Energy) அமைப்பதற்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் ஐ.ஐ.டி மும்பையிடையே 2-1-2019 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 
  • யு.கே. சின்ஹா குழு  :  சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்வதற்கு இந்திய பங்கு, பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவர் யு.கே. சின்ஹா தலைமையிலான நிபுணர் குழுவை ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது.
    8 உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழு, தொழில் நிறுவனங்களின் வர்ச்சிக்குத் தடையாக இருக்கும் அமைப்பு ரீதியிலான பிரச்னைகள் குறித்தும், அவற்றுக்கு கடனுதவி அளிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்யும். மேலும், அந்த நிறுவனங்கள், பொருளாதார நிலைத்தன்மையுடன் இருப்பதற்கு நீண்டகால தீர்வுகளையும் அந்தக் குழு பரிந்துரைக்கும்.

திட்டங்கள்
  • பிரதமர் சமையல் எரிவாயு (உஜ்வாலா)  திட்டத்தில் (Pradhan Mantri Ujjwala Yojana)  கீழ் 02-01-2019 அன்றுடன் 6 கோடி பயனாளிகள்  பயன்பெற்றுள்ளனர். 
    • பிரதமரின் உஜ்வாலா திட்டத்தை உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பாலியாவில் (Ballia) பிரதமர் திரு நரேந்திர மோடி 01-05-2016 அன்று துவக்கி வைத்தார்.  மூன்று ஆண்டுகளுக்குள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஐந்து கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • ’ராஷ்டிரிய யுவ சாஷாக்திகாரன் கார்யாக்ராம் திட்டத்தை’ (Rastriya Yuva Sashaktikaran Karyakram Scheme)  2019-2020 ஆண்டுகளுக்கும் நீட்டிக்க மத்திய அமைச்சரவை 2-1-2019 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. 
    • மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தினால் நிறைவேற்றப்பட்டுவரும் இத்திட்டமானது, 12 ஐந்தாண்டு திட்ட காலக்கட்டத்தில், ஏற்கனவே இருந்து வந்த 8 இளைஞர் நலன் திட்டங்களை ஒருங்கிணைத்து ‘ராஷ்டிரிய யுவ சாஷாக்திகாரன் கார்யாக்ராம் திட்டம்’ எனும் ஒரே திட்டமாக அமலாக்கம் செய்யப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.  அந்த எட்டு திட்டங்களின் விவரம் வருமாறு, 
      1. Nehru Yuva Kendra Sangathan(NYKS);
      2. National Youth Corps (NYC);
      3. National Programme for Youth & Adolescent Development (NPYAD);
      4. International Cooperation;
      5. Youth Hostels (YH);
      6. Assistance to Scouting & Guiding Organizations;
      7. National Discipline Scheme (NDS); and
      8. National Young Leaders Programme (NYLP).

உலகம்
  • பிரேசில் நாட்டின் புதிய அதிபராக ஜைர் போல்சோனாரோ ( Jair Bolsonaro ) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நியமனங்கள்
  • இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் ( Life Insurance Corporation of India )  தலைவராக (Acting Chairman)  ஹேமந்த் பார்கவா (Hemant Bhargava) நியமிக்கப்பட்டுள்ளார். 
  • தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (National Legal Services Authority (NALSA)) செயல் தலைவராக (Executive Chairman)  நீதியரசர்  AK சிக்கிரியை (Justice AK Sikri ) குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார். 
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar