--> Skip to main content

TNPSC Group IV 2018 தேர்விற்கு படிக்க வேண்டிய புத்தகங்கள்

Important Books List for TNPSC CCSE-IV (Group IV) 2018 Exam Preparation


1. பள்ளிப் பாடப்புத்தகங்கள் : 
i) பொதுத்தமிழ் - 6-10 வரையிலான தமிழ் பாடப்புத்தகங்கள்
ii) வரலாறு, புவியியல் - 6-10 வரையிலான சமூக அறிவியல் பாடப்புத்தகங்கள்
iii) அறிவியல் - 6-10 வரையிலான பாடப்புத்தகங்கள்
iv) கணிதம் - 7-10 வகுப்பிலுள்ள அளவியல் பாடப்பகுதிகள்
vi) பொருளாதாரம் -6,7,8,9,10 மற்றும் 11 ஆம் வகுப்புகள்
vii) அரசியல் அறிவியல் - 6-10 வரையிலான குடிமையியல் பகுதிகள், 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகம்

குறிப்பு : உங்களிடம் மேற்கூறிய அனைத்து பள்ளிப்பாடப் புத்தகங்களும் இல்லையென்றாலும் கவலைப்படத் தேவையில்லை,  http://www.textbooksonline.tn.nic.in/Default.htm என்ற தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் இணைய தளத்திலிருந்து அனைத்து புத்தகங்களையும் உங்கள் மொபைல் , டேப்ளட் அல்லது கணிணியில் டவுண்லோடு செய்து கொண்டு, படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். 

2. நடப்பு நிகழ்வு குறிப்புகள் : www.tnpscportal.in  நடப்பு நிகழ்வுக் குறிப்புகள்

3. அறிவுக்கூர்மை  :  R.S.Agarwal - Quantitative Aptitude Book (ஆங்கிலம் புரிந்து கொள்ள இயலுமென்றால்), இல்லையெனில் தமிழில் வெளிவந்திருக்கும் கணியன், சக்தி போன்றவற்றில் ஏதேனும் புத்தகங்களைப் படிக்கலாம். முடிந்த வரை டி.என்.பி.எஸ்.சி முந்தைய தேர்வுகளில் கேட்கப்ப்ட்டிருக்கும் திறனறிவு தொடர்பான வினாக்களை பயிற்சி செய்வது அவசியம்.

4. பொது அறிவுப் பகுதி :  Arihant General Knowledge Book குறிப்பாக கடைசி 80 பக்கங்களிலுள்ள தகவல்கள் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளுக்கு தயாராக உதவியாக இருக்கும். ஆங்கிலம் புரிந்து கொள்ள இயலவில்லையெனில்,  விகடன் பொது அறிவு களஞ்சியம் அல்லது மனோரமா இயர்புக்  ஏதேனும் ஒரு புத்தகத்தைப் படிக்கலாம். மேலும் பொருளாதாரம், அரசியல் அறிவியல் மற்றும் புவியியல் பகுதிகளையும் இப்புத்தகங்களிலிருந்து படிக்கலாம். 

5. TNPSC முந்தைய தேர்வு வினாத்தாள்கள் - உங்களால் இயன்ற வரையில் முந்தைய VAO, Group IV போன்ற எஸ்.எஸ்.எல்.சி தரத் தேர்வுகளின் வினாத்தாள்களைப் பயிற்சி செய்யுங்கள்.

Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar