--> Skip to main content

Target TNPSC 2014 ஆரம்பம் ...

அனைத்து TNPSC Portal உறுப்பினர்களுக்கும்  வணக்கம் !


2014 ஆம் ஆண்டில் நுழைந்திருக்கும் உங்களுக்கு , இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் மாபெரும் வெற்றி ஆண்டாக எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் . இந்த வெற்றியின் ஆண்டில் நீங்கள் விரும்பிய TNPSC தேர்வில் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். அதற்கு நீங்கள் ஓயாமல் உச்சரிக்க வேண்டிய  மூன்று மந்திர வார்த்தைகள் தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை"  என்ற நம்பிக்கை  உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும்.  அதற்காக  எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம். 


"Target TNPSC 2014"

பயிற்சி நிறுவனங்களுக்கு  சென்று பயிற்சி பெற இயலாத அனைத்து நண்பர்களுக்கும் இந்த இணைய வழி பயிற்சி வழிகாட்டுதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். TNPSC ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம். 

உங்களில் அநேகர் study materials கேட்டு மின்னஞ்சல் செய்திருந்தீர்கள் , TNPSC Portal எப்போதுமே உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட Guide Book மட்டும் படித்தால் போதும் என வழிகாட்டாது, மேலும் நாங்களும் ஏதாவது material ஐ வழங்கி விட்டு, இதை மட்டும்  படித்தால் வெற்றி பெறலாம் என உங்களைத் தவறாக வழி நடத்த மாட்டோம். ஆனால் அவ்வப்போது நீங்கள் படித்தவற்றை திருப்பி பார்க்கும் வகையிலும், நீங்கள் படிக்காத உண்மைகள் எதாவது இருந்தால் நினைவு படுத்தும் வகையில் பாடத்திட்டத்தைச் சார்ந்து notes நிச்சயம் வழங்குவோம்.  எல்லாவற்றிற்கும் மேலாக , தற்போது கடந்த TNPSC Group 2 தேர்வில் கேட்டது போன்ற  analytical questions pattern யை நீங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டுமானால் நிச்சயமாக நீங்களே புத்தகங்களைப் படித்து முழு விசயங்களையும் புரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.  பள்ளிப்பாடப் புத்தகங்களை படித்ததற்கு பின் நீங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் எவை என நாங்கள் பட்டியலிட்டிருக்கிறோம், இவற்றைத் தவிர நீங்கள் எத்தனை புத்தகங்களையும் நீங்கள் படிக்கலாம் (ஆனால் இவற்றை படித்து முடித்து விட்டு மட்டும்). இந்த Link ல் சென்று அந்த புத்தகப் பட்டியலை பார்க்கவும்.


TNPSC ஆங்கிலத்தில் மட்டும் கொடுத்திருந்த பொது அறிவு பாடத்திட்டத்தை பாடவாரியாக்  எளிய முறையில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளோம். இந்த பாடத்திட்டத்திலிருந்து ஒவ்வொரு வாரமும்  குறிப்பிட்ட பகுதிகள் தேர்வுக்கான பாடத்திட்டமாக அறிவிக்கப்பட்டு, அந்த வார இறுதியில் தேர்வுகள் நடைபெறும்.  இந்த தேர்வுகள் வருடம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். வெற்றி பெறுபவர்களின் பட்டியலில் உங்கள் பெயரும் இருக்கும் . வாழ்த்துக்கள் !

இயற்பியல்

வேதியல் 

தாவரவியல் 

விலங்கியல் 

சமீப கால நிகழ்வுகள் 

இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம்

இந்திய அரசியல்

புவியியல் 

இந்திய பொருளாதாரம் 

இந்திய சுதந்திரப்போராட்ட வரலாறு 

மனத்திறன் தேர்வுகள்


இந்த பாடத்திட்டத்தை  முழுமையாக Download செய்ய CLICK HERE

(TNPSC Group 1 Syllabus in Tamil )


இந்த வாரம் ( வாரம் -1 ) படிக்க வேண்டிய பாடப்பகுதிகள்  - இங்கு CLICK பண்ணவும்
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar