--> Skip to main content

TNUSRB Police Exam 2010 - Original Question Paper and Analysis- 1

2013 ஆம் ஆண்டு  காவலர் Gr 2, சிறைக் காவலர், தீயணைப்புத் துறை காவலர் பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது என்பதை TNUSRB தனது இணையத் தளத்தில்  அறிவித்துள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். 

சென்ற முறை 2010 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மொத்தம் 80 வினாக்கள் அடங்கிய எழுத்துத் தேர்வின் அசல் தாள் 4 பகுதிகளாக ( type செய்து வெளியிடுவதால்) இங்கு வெளியிடப்படுகிறது.

 இதன் முக்கிய நோக்கம், வர இருக்கிற TNPSC, TNUSRB காவலர், உதவி ஆய்வாளர் தேர்வுகளுக்கு தயாராகும் உங்களுக்கு தன்னம்ப்பிக்கை ஏற்படுத்துவது தான். 


கீழ்க்கண்ட  20 கேள்விகளில்  20/20 ம் தமிழ் நாடு அரசு 6 முதல் 10 வரையிலான பாடங்களிலிருந்து எடுக்கப்பட்டவை என்பது TNPSC இணையவழி பயிற்சி உறுப்பினர்கள் அனைவருக்கும்  தெரிய வரலாம். 

எனவே நீங்கள் தமிழ் நாடு அரசு TNUSRB Police, Sub Inspector தேர்வுகளுக்குத் தயாராபவர்களாக இருந்தால் தயவு செய்து இன்று முதலாவது  பள்ளிப் பாடப்பகுதிகளைப் படிக்க ஆரம்பியுங்கள்.  முதலில் பள்ளிப் பாடப்பகுதிகளை படித்து முடித்து விட்டு பின்னர் எந்த  கைடு புத்தகங்களையும் படித்துக் கொள்ளுங்கள்.


1.பஞ்சபாண்டவ ரதங்கள் அமைந்துள்ள இடம்
மாமல்லபுரம்

2.மருது சகோதரர்கள் ஆட்சி புரிந்த பாளையம்
சிவகங்கை

3.இந்திய தேசியச் சின்னம் பின்வரும் கட்டிடகலை படைப்பிலிருந்து எடுக்கப்பட்டது ?
சாரநாத் கல்தூண்

4.பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்படுபவர் ?
லாலா லசபதிராய்

5.சோழர்களின் சின்னம் ?
புலி

6.வங்கப்பிரிவினை நடந்த ஆண்டு
1905

7.மொகஞ்சதாரோ என்பதன் பொருள்
இறந்தவர்களின் நகரம்

8.ஒரு நற்குடிமகன் பெற்றிருக்க வேண்டியது
தேசபக்தி, சகிப்புத்தன்மை, நற்கல்வி

9.பொளத்தர்கள்  கொண்டாடுவது
புத்த பூர்ணிமா

10.இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்
அம்பேத்கார்

11.இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்
22

12.சத்யமேவஜெயதே  முதலில்  எழுதப்பட்ட மொழி
தேவநாகரி

13.பெரிய நகரங்களில் செயல்படும் அமைப்பு
மாநகராட்சி

14.இந்தியாவில் உயிர்நாடி கிராமங்கள் என்று குறிப்பிட்டவர்
காந்தியடிகள்

15.சட்லஜ்  நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள  அணை
பக்ராநங்கல்

16.தீபகற்ப இந்தியாவின் மிக நீளமான ஆறு
கோதாவரி

17.கங்கை நதிக் கழிமுகத்தில் காணப்படும் தாவரங்கள்
சுந்தரவனக் காடுகள்

18.கிரீன்விச் தீர்க்கக்கோடு என்பது
0 டிகிரி தீர்க்கக் கோடு

19.நீண்டகால சராசரி வானிலையை இவ்வாறு அழைப்பர்
காலநிலை

20.சணல் பயிர் அதிகமாக விளையும் மாநிலம்
மேற்கு வங்கம்


Police Constable Exam 2010 Original Question paper with answers
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar